
பிளாஷ்பேக்: ஸ்ரீதேவி விஜயகுமாரை அடையாளம் காட்டிய அம்மா வந்தாச்சு
நவ 19, 2026
Advertisement
விஜயகுமாரின் கலைகுடும்பத்து வாரிசு ஸ்ரீதேவி விஜயகுமார். ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர் "பிரியமான தோழி" படத்தின் மூலம் நாயகி ஆனார். அதன் பிறகு "தித்திக்குதே" படத்தில் நடித்தார். இரண்டு படங்களுக்கும் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது பெற்றார். அதன் பிறகு தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் நடித்தாலும் வேறு எந்த விருதுகளும் பெறவில்லை. ஆனாலும் ஸ்ரீதேவி பெற்ற முதல் விருது "அம்மா வந்தாச்சு" படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திற்கான விருதை பெற்றார்.
இந்த படம் "என் ஜீவ நினககி" என்ற கன்னட படத்தின் ரீமேக் ஆகும். இதனை பி.வாசு இயக்கினார். கே.பாக்யராஜ் நடித்து, தயாரித்தார். குஷ்பு நாயகியாக நடித்தார். டெல்லி கணேஷ், வெண்ணிற ஆடை மூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தேவா இசை அமைத்திருந்தார். கன்னடத்தில் பெற்ற வெற்றியை தமிழில் இந்த படம் பெறவில்லை.
மருத்துவப் பிரதிநிதியான நந்தகுமாரும் (கே.பாக்யராஜ்) விற்பனைப் பெண்ணான நந்தினியும் (குஷ்பு) காதலிக்கின்றனர். இந்நிலையில், ஒரு சிறுமி (ஸ்ரீதேவி) தன்னை நந்தகுமாரின் மகள் என்று உரிமை கொண்டாடுவதால் அவர்களின் காதலில் ஏற்படும் குழப்பங்களே படத்தின் கதை.

















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…