பிளாஷ்பேக் : ஒரே ஒரு படம் இயக்கிய இரட்டையர்கள்
நவ 17, 2026
Advertisement
தமிழ் சினிமாவிற்கு ஏராளமான இரட்டை இயக்குனர்கள் வந்து சென்றிருக்கிறார்கள். இணைந்தும் பல படங்களை தந்திருக்கிறார்கள், பிரிந்தும் பல படங்களை தந்திருக்கிறார்கள். கிருஷ்ணன்-பஞ்சு, ராபர்ட்-ராஜசேகர், பாரதி-வாசு, டீஜே-டீகே என பலரும் உள்ளனர்.
ஆனால் சினிமாவில் நுழைந்து ஒரே ஒரு படத்தை மட்டும் இயக்கி விட்டு சினிமாவில் இருந்து விலகிச் சென்ற இரட்டையர்கள் சார்லி-மணியம். இருவரும் இணைந்து 1964ம் ஆணடு "நல்வரவு" என்ற படத்தை இயக்கினார்கள். இப்படத்தில் ஆர்.முத்துராமன், புஷ்பலதா மற்றும் ஈ.வி.சரோஜா ஆகியோர் நடித்தனர். கதையை வித்வான் வே.லட்சுமணன் எழுத, டி.சலபதி ராவ் இசையமைத்தார். எஸ்.வி.மூவிஸ் சார்பில் கே.என்.நடராஜன் தயாரித்தார்.
மதம், ஜாதி சாராத சீர்திருத்த திருமணம், விவாகரத்து, மறுமணம் குறித்து இந்த படம் பேசியது. பரவலான பாராட்டுகளை படம் பெற்றாலும் இந்த இரட்டையர்கள் வேறு படம் இயக்கியதாக தகவல் இல்லை. அவர்களை பற்றிய தனிப்பட்ட விபரங்களும் கிடைக்கவில்லை.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…