பிளாஷ்பேக் : யானைக்கும் அடிசறுக்கும்
நவ 17, 2026
Advertisement
தமிழ் சினிமாவின் டாப் 5 இயக்குநர்களில் ஒருவர் மகேந்திரன். குறைந்த படங்களே இயக்கி இருந்தாலும் இன்றைக்கும் கொண்டாடப்படுகிறவர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எனக்கு பிடித்த இயக்குநனர் மகேந்திரன் என்று குறிப்பிட்டார். இத்தனைக்கும் மகேந்திரன் இயக்கத்தில் முள்ளும் மலரும், கை கொடுக்கும் கை, ஜானி என 3 படங்களில் தான் ரஜினி நடித்தார்.
அவர் இயக்கிய அழகிய கண்ணே, மெட்டி, படங்கள் சுமாரன வரவேற்பை பெற்றவை. ஆனால் மகேந்திரன் படங்களில் மிக மோசமான தோல்வியை சந்தித்த படம் "ஊர் பஞ்சாயத்து". பாண்டியராஜன், மகாலட்சுமி, ஸ்ரீகாந்த், வி.கே.ராமராமி, எஸ்.என்.பார்வதி, சுலக்ஷனா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். எஸ்.பி.பாலசுப்ரமணியம் இசை அமைத்திருந்தார்.
ஒரு கிராமத்து பெரியவரின் வளர்ப்பு மகனுக்கும், அவரது குடும்பத்திற்குமான மோதல்தான் கதை. சாதாரணமான இந்த கதையை மகேந்திரன் தன் பாணியில் சிறப்பான திரைக்கதையில் வெளிப்படுத்த முயற்சித்து அதில் தோல்வி கண்டதால் படம் வரவேற்பை பெறவில்லை. "யானைக்கும் அடிசறுக்கும்" என்றே அன்று படத்தை பலர் விமர்சித்தனர்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…