பிளாஷ்பேக் : எஸ்.வி.சுப்பையாவின் வித்தியாசமான பாலிசி
நவ 18, 2026
Advertisement
நாடகத்தில் இருந்து சினிமாவிற்கு வந்த நடிகர்கள் மிகை நடிப்பையே தந்தார்கள். காரணம் நாடகத்தில் ஒலி பெருக்கி இல்லாததால் அவர்கள் வசனத்தை சத்தமாக பேசியே நடிக்க வேண்டும். அதுவே அவர்களுக்குள் மிகை நடிப்பை கொண்டு வந்தது. அதனால் சிவாஜியிடம் கூட சில காலம் வரை மிகை நடிப்பு வெளிப்பட்டது. ஆனால் நாடகத்தில் இருந்து வந்தாலும் கடைசி வரை இயல்பான நடிப்பை கொடுத்தவர் எஸ்.வி.சுப்பையா.
சித்தூர் வி.நாகையா, எஸ்.வி.ரங்கா ராவ் போன்ற தெலுங்கு நடிகர்களுக்கு இணையாக பேசப்பட்டவர். அதேநேரத்தில் தனக்கென சில பாலிசிகளையும் வைத்திருந்தார். ஒட்டு மீசை, தாடி வைத்து நடிப்பதில்லை என்பது அதில் ஒன்று. இதனால் பல பட வாய்ப்புகளை தவிர்த்தார். ஒட்டு மீசை, தாடி, தலைமுடி வைத்தால் தன்னால் இயல்பாக நடிக்க முடியாது என்று அவர் கருதியதே இதற்கு காரணம்.
என்றாலும் ஸ்ரீதருக்காக ஒரே ஒரு படத்தில் தன்னை மாற்றிக் கொண்டார். ஸ்ரீதர் இயக்கிய "கலைக்கோவில்" படத்தில் வரும் முக்கியமான வீணை வித்வான் கேரக்டரில் நடிக்க எஸ்.வி.ரங்காராவை ஒப்பந்தம் செய்திருந்தார் ஸ்ரீதர். அவர் தினமும் படப்பிடிப்புக்கு தாமதமாக வரவே அவரை நீக்கி விட்டு அவருக்கு பதிலான எஸ்.வி.சுப்பையாவை நடிக்க வைத்தார். ஆனால் வீணை வித்வான் கேரக்டருக்கு ஒட்டுத்தாடி, மீசை வைக்க வேண்டும் என்று ஸ்ரீதர் சொல்ல அதை மறுத்த சுப்பையா பின்னர் கேரக்டரின் தன்மை அறிந்து ஸ்ரீதருக்காக நடித்து கொடுத்தார். எஸ்.வி.சுப்பையா பாரதியார் வேடத்தில் நடித்தபோது ஒட்டு மீசை வைக்காமல் தானே மீசை வளர்த்து நடித்தார்.
பின்னால் காலப்போக்கில் நவீன மாற்றங்களை ஏற்றுக் கொண்டு கடைசியாக சில படங்களில் தனது பாலிசியை விட்டுக் கொடுத்து நடித்தார். அவர் அளவிற்கு பாரதியார் வேடம் இன்று வரை யாருக்கும் பொருத்தமாக அமையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…