
காலை 6 மணி காட்சி : முதல்வர் விஜய்க்கு தனுஷ் நன்றி
அவர் வெளியிட்ட அறிக்கையில், ‛‛ஒரு திரைப்படத்தின் வெற்றி என்பது பல்வேறு துறைகளைச் சேர்ந்த பலரின் கூட்டு உழைப்பாலும், அர்ப்பணிப்பாலும் உருவாவது. அத்தகைய திரைப்படத் துறையில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் நீங்கள் கொடுக்கக்கூடிய மிகப்பெரிய ஆதரவு, திரையரங்கிற்குச் சென்று திரைப்படங்களைப் பார்ப்பதும், அதன் மூலம் திரையுலகின் வளர்ச்சிக்குப் பங்களிப்பதும்தான்.
வரும் நவம்பர் 20ம் தேதி வெளியாகவிருக்கும் “ஓம்” திரைப்படத்தின் காலை 6 மணி காட்சிக்கு அனுமதி வழங்கிய தமிழக அரசிற்கும், முதல்வர் விஜய்க்கும் மனமார்ந்த நன்றி. காலை 6 மணி காட்சிக்கு வருகை தரும் ரசிகர்கள் அனைவரும் பாதுகாப்புடனும், பொறுப்புடனும், அடுத்தவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமலும் நடந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். திரைப்படத்தை பார்த்து மகிழ்வதே உண்மையான கொண்டாட்டம். அனைவருக்கும் அன்பும், நன்றியும்"".
இவ்வாறு தனுஷ் தெரிவித்துள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…