
இரண்டு வார இடைவெளியில் அடுத்தடுத்து வெளியாகும் மம்முட்டி படங்கள்
நவ 18, 2026
Advertisement
மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் உருவான "பேட்ரியாட்" திரைப்படம் கடந்த மே 1ம் தேதி வெளியானது. அதன் பிறகு கிட்டத்தட்ட ஆறு மாத இடைவெளியில் அவரது படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்த நிலையில் அடுத்தடுத்து இரண்டு வார இடைவெளியில் மம்முட்டியின் படங்கள் தொடர்ந்து வெளியாக இருக்கின்றன. தமிழில் தனுஷூடன் இணைந்து ராஜ்குமார் பெரியசாமி டைரக்ஷனில் அவர் நடித்துள்ள "ஓம்" திரைப்படம் வரும் நவம்பர் 20ம் தேதி வெளியாகிறது.
அதே சமயம் பிரபல மலையாள சீனியர் இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மம்முட்டி நடித்துள்ள "பாதயாத்ரா" திரைப்படமும் தற்போது ரிலீஸூக்குத் தயாராகியுள்ளது. வரும் டிசம்பர் 4ம் தேதி இந்தப் படம் உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால், மம்முட்டியின் "ஓம்" படம் ரிலீஸ் ஆகும் அதே நாளில் தான் அவரது மகன் துல்கர் சல்மான் தெலுங்கில் நடித்துள்ள "ஆகாசம்லோ ஒக்க தாரா" திரைப்படமும் வெளியாகிறது. அந்த வகையில் ஒரே நேரத்தில் தந்தை, மகன் இருவரின் படங்களும் ஒரே நாளில் மோதுவதும் இருதரப்பு தரப்பு ரசிகர்களையும் உற்சாகமடைய வைத்துள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…