'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
தெலுங்கு திரையுலகில் பிரபல சீனியர் நடிகரான மோகன் பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு, தற்போது கண்ணப்பா என்கிற புராண படத்தை தயாரித்து அதில் கதாநாயகனாக நடித்து வருகிறார். முகேஷ் குமார் சிங் இயக்கியுள்ளார். படம் ஜூன் 27ம் தேதி வெளியாக இருக்கிறது. பான் இந்திய படமாக இது உருவாகியுள்ளது. அதற்கேற்றபடி மலையாளத்தில் இருந்து மோகன்லால், பாலிவுட்டில் இருந்து அக்ஷய் குமார் மற்றும் தெலுங்கில் இருந்து நடிகர் பிரபாஸ் ஆகியோர் மூன்று முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களது கதாபாத்திரம் கேமியோ என்று சொல்லும் அளவிற்கு சில நிமிடங்களே வந்து போகும் விதமாகத்தான் உருவாக்கப்பட்டிருந்தது என்று சொல்லப்பட்டு வந்தது. இந்த நிலையில் நடிகர் விஷ்ணு மஞ்சு இந்த மூவரும் படத்தில் எவ்வளவு நேரம் இடம் பெறுகிறார்கள் என்கிற விஷயத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அந்த வகையில் இந்த படத்தில் ருத்ரா என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் பிரபாஸ் 15லிருந்து 20 நிமிடங்கள் வரை திரையில் தோன்றுகிறாராம். குறிப்பாக கடைசி ஐம்பது நிமிட காட்சிகளில் இவரது கதாபாத்திரம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்குமாம். அதேபோல கிராதா என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ள மோகன்லால் படத்தில் 15 நிமிட காட்சிகளில் வருகிறார் என்றும், சிவன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள அக்ஷய் குமார் பத்து நிமிடங்கள் வந்து போகிறார் என்றும் கூறியுள்ளார் நடிகர் விஷ்ணு மஞ்சு.