‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
பாலிவுட் நடிகையான நேஹா துபியா கடந்த 15 வருடங்களாக ஹிந்தி சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார். முன்னணி நடிகையாக இல்லாவிட்டாலும் கூட குறிப்பிடத்தக்க நடிகையாக வலம் வருகிறார். தெலுங்கிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ள இவர், கடந்த 2018ல் நடிகர் அங்கத் பேடி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ஏழு வயதில் பெண் குழந்தையும், இரண்டு வயதில் ஆண் குழந்தையும் இருக்கின்றனர். இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறும்போது திருமணத்திற்கு முன்பே தான் கர்ப்பம் ஆகிவிட்டதாகவும் அதன் பிறகு தனது திருமணம் நடைபெற்றதாகவும் கூறியுள்ளார்.
அது மட்டுமல்ல தானும் தனது காதலர் அங்கத் பேடியும் சேர்ந்து திருமணத்திற்கு முன்பே குழந்தை பெற்றுக் கொள்வோம் என முடிவு செய்ததாகவும் ஆனாலும் தான் கர்ப்பமாக இருந்தபோது சில காரணங்களால் உடனடியாக தங்களது திருமணத்தை நடத்தியதாகவும் கூறியுள்ளார். அப்படி திருமணத்திற்கு பின்பு வெகு சில மாதங்களில் தான் கர்ப்பமாக இருப்பதை வெளிப்படையாக அறிவித்தபோது அனைவரும் இவ்வளவு சீக்கிரமா என அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தனர் என்றும் கூறியுள்ளார்.
தான் கர்ப்பமாக இருப்பதை வெளியில் சொன்ன முதல் நபர் என்றால் அது தனது தோழி நடிகை சோஹா அலிகான் தான் என்றும் அவரிடம் கூட தான் வலிய சென்று இந்த தகவலை சொல்லவில்லை,. ஒருநாள் ரெஸ்டாரண்டில் சோஹா அலிகான் மற்றும் அவரது கணவர் குணால் ஆகியோருடன் உணவருந்திக் கொண்டிருந்தபோது குணால் மீது மயங்கி விழுந்து விட்டேன். அதன் பிறகு டாக்டர் வந்து பரிசோதித்த போது தான் நான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை அவர்களிடம் சொல்ல வேண்டி வந்தது என்றும் அந்த பேட்டியில் கூறியுள்ளார் நேஹா துபியா.