ரேஸில் கார் பழுது : அஜித்தின் பாசிட்டிவ் ரிப்ளே...! | 48 மணிநேரம் தூக்கமில்லை : ஷாலினி பாண்டே | 16 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடை செய்ய வேண்டும் : சோனு சூட் | ஆளுமை உரிமை கேட்டு பவன் கல்யாண் வழக்கு | விவாகரத்து வதந்தி : கடும் கோபத்தை வெளிப்படுத்திய அபிஷேக் பச்சன் | சூர்யாவின் கருப்பு ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போகிறதா? | ரெட்ட தல படத்தின் டார்க் தீம் பாடல் வெளியானது | சோசியல் மீடியாவில் போட்ட பதிவால் ட்ரோலில் சிக்கிய தமன் | இந்த வார ரிலீஸ் : தியேட்டர்களைக் காப்பாற்றும் 'படையப்பா' | பிறந்தநாள் வாழ்த்து கூறியவர்களுக்கு ரஜினிகாந்த் நன்றி |

தமிழில் 2012ல் வெளிவந்த 'தோனி' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே. அதன்பின் 'ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச் செல்வன்' ஆகிய படங்களிலும் நடித்தார். ஆனால், ரஜினிகாந்த் ஜோடியாக நடித்த 'கபாலி' படம் மூலம்தான் தமிழில் பிரபலமானார்.
தற்போது 'சிஸ்டர் மிட்நைட்' என்ற ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார். அப்படம் பிஎப்ஐ லண்டன் பிலிம் பெஸ்டிவலில் திரையிடப்பட்டது. அந்த விழாவில் கலந்து கொண்டார் ராதிகா. அப்போது அவர் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. அதற்கு முன்பாக அவருடைய தாய்மை பற்றி அவர் எதுவும் சொல்லாமல் இருந்தது ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
லண்டனில் படித்த போது ஆங்கிலேயே இசையமைப்பாளர், வயலின் கலைஞர் பெனடிக்ட் டெய்லர் என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார் ராதிகா. திருமணமான 12 வருடங்களுக்குப் பிறகு ராதிகா தாய்மை அடைந்துள்ளார். பாலிவுட் கதாநாயகிகள் அடுத்தடுத்து தாய்மை அடைந்து குழந்தை பெற்று வருகிறார்கள். ஆலியா பட், தீபிகா படுகோனே வரிசையில் தற்போது ராதிகாவும் சேர்ந்துள்ளார்.




