சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் | ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள் | தேவயானி அடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா? : ராஜகுமாரன் சொன்ன அதிர்ச்சி தகவல் | நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக் |
ரஜினியும், ஏவிஎம் நிறுவனமும் இணைந்து பணியாற்றிய முதல் படம் 'முரட்டுக்காளை'. ரஜினியின் டாப் டென் படங்களில் இதுவும் ஒன்று. வழக்கமான ஹேர் ஸ்டைலை மாற்றி ரஜினி நடித்த படம். இந்த படத்தில் பவுர்புல்லான வில்லன் கேரக்டரில் ஒரு பெரிய நடிகரை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்தன. அப்போது கதாசிரியர் பஞ்சு அருணாசனத்தின் நினைவுக்கு வந்தவர் ஜெய்சங்கர்.
100 படங்களுக்கு மேல் ஹீரோவாக நடித்த ஜெய்சங்கர் படங்கள் எதுவும் இன்றி வீட்டில் இருந்தார். என்றாலும் ஹீரோவாக நடித்தவர் வில்லனாக நடிக்க ஒப்புக் கொள்வரா என்ற தயக்கம் இருந்தது. என்றாலும் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணனே ஜெய்சங்கரை அழைத்திருக்கிறார். தன்னை வில்லனாக நடிக்கக் கேட்கிறார்களே...' என்கிற தயக்கம் முதலில் ஜெய்சங்கருக்கு இருந்தாலும், பஞ்சு அருணாச்சலம், ஏவிஎம் சரவணன், எஸ்.பி.முத்துராமன் ஆகியவர்கள் தனது நலம் விரும்பிகள் என்கிற ஒரே காரணத்திற்காக உடனே ஒப்புக் கொண்டார் ஜெய்சங்கர்.
ஹீரோ ரஜினிக்கே இது ஆச்சரியமான செய்திதான். ஜெய்சங்கர் நான் ரசித்து பார்த்த ஹீரோ. அவர் வில்லனாக நடிக்க ஒப்புக் கொண்டதே பெரிய விஷயம். ஆனாலும் அவருக்குரிய மரியாதையை நாம் கொடுக்க வேண்டும் என்ற ரஜினி மூன்று நிபந்தனைகளை விதித்தார்.
படத்தின் விளம்பரங்களில் எனக்கு இணையான முக்கியத்தும் ஜெய்சங்கருக்கும் தரப்பட வேண்டும். கதைப்படி வரும் கற்பழிப்பு காட்சியை கற்பழிக்க முயற்சிப்பது போன்று மாற்றம் செய்ய வேண்டும். கிளைமாக்சில் போலீசார் வில்லனை அடித்து இழுத்து செல்வது போன்ற காட்சியை மாற்ற வேண்டும் என்றார். அப்படியே செய்யப்பட்டது.