நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்த ‛புஷ்பா' படத்தின் இரண்டு பாகங்களும் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய அளவில் வசூலை பெற்றன. இந்த நிலையில் தற்போது அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வரும் புதிய படத்திலும் ராஷ்மிகா மந்தனா இணைந்திருக்கிறார். இந்த படத்தில் தீபிகா படுகோனே, மிருணாள் தாகூர், ஜான்வி கபூர் என பலர் முக்கிய வேடங்களில் நடிப்பதாக கூறப்படும் நிலையில், ராஷ்மிகா மந்தனா ஒரு நெகட்டிவ் ரோலில் நடிப்பதாக தற்போது புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.
இது உண்மையாக இருந்தால் பெரும்பாலும் பக்கத்து வீட்டு பெண் வேடங்களுக்கு பெயர் பெற்ற ராஷ்மிகாவின் சினிமா கேரியரில் இந்த படம் ஒரு அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். மேலும் இது படக்குழுவால் உறுதிப்படுத்தப்படாத செய்தி என்றாலும் கூட, இப்படி ஒரு செய்தி வெளியானதுமே வழக்கத்திலிருந்து மாறுபட்டு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் ராஷ்மிகா துணிச்சலாக நடிப்பது பாராட்டுக்குரியது என்று பலரும் கமெண்ட் கொடுத்து வருகிறார்கள்.