அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் ‛கூலி'. இப்படம் ஆகஸ்டு 14ம் தேதி திரைக்கு வருகிறது. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் ‛சிக்கிட்டு' என்ற பாடல் கடந்த மாதம் வெளியானது. அந்த பாடலில் டி. ராஜேந்தர், அனிருத், அறிவு ஆகியோர் நடனமாடியிருந்தார்கள். என்றாலும் எதிர்பார்த்தபடி அந்த பாடல் ரசிகர்களை கவரவில்லை.
இந்த நிலையில், தற்போது கூலி படத்தில் இடம்பெற்றுள்ள ‛மோனிகா' என்ற பாடலை வெளியிட்டுள்ளார்கள். பூஜா ஹெக்டே நடனமாடியுள்ள இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. அதோடு, யுடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்திருக்கிறது.
மேலும், சமீபகாலமாக அனிருத் இசையமைக்கும் படங்களின் பாடல்கள் வெளியானதுமே ஏற்கனவே வெளியான ஹிட் பாடல்களை தழுவி இசையமைத்திருப்பதாக காப்பி சர்ச்சைகள் எழுந்து வருகிறது. இந்த நிலையில், இந்த மோனிகா பாடலானது ஏற்கனவே அனிருத்தே இசையமைத்த ‛விடாமுயற்சி' படத்தில் இடம்பெற்ற ‛சாவடீக்கா' என்ற பாடலின் காப்பி என்று நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள். அதோடு இதுவரை மற்றவர்களின் பாடலை காப்பியடித்த அனிருத், இப்போது தன்னுடைய பாடலையே காப்பி அடிக்க தொடங்கிவிட்டாரா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.