‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
''ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே… வாழ்வென்றால் போராடும் போர்க்களமே…''. கடந்த, 20 ஆண்டுகள் முன் வெளியான 'ஆட்டோகிராப்' படத்துக்காக, கவிஞர் பா.விஜய் எழுதிய பாடல் தான் இது. எண்ணற்ற இளைஞர்கள் மத்தியில் இன்றளவும் தன்னம்பிக்கையை விதைத்துக் கொண்டே இருக்கிறது.
திருப்பூரில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த விஜயிடம் ஒரு மினி பேட்டி:
தன்னம்பிக்கை தரும் பாடல்களை தொடர்ந்து எழுதுவீர்களா?
கண்டிப்பாக. தற்போது வெளியாகும் சினிமாக்களில் இளைஞர்கள் மத்தியில் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலான பாடல்கள் அதிகளவில் இடம் பெறுகின்றன. அது, தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது.
பெரிய பட்ஜெட் படங்களை விட, சின்ன பட்ஜெட் படங்கள் வெற்றி பெறுகிறதே?
சினிமா என்பது, ஜனரஞ்சகம் மற்றும் வியாபார நோக்கத்தை அடிப்படையாக கொண்ட ஒரு கலை. பெரிய பட்ஜெட், சிறிய பட்ஜெட் என்ற பார்வையை காட்டிலும், நல்ல கதையம்சம் கொண்ட படங்களை மக்கள் ஏற்றுக் கொள்கின்றனர். அறிமுக நடிகர்களை வைத்து எடுக்கப்படும், சிறிய பட்ஜெட் படங்கள், 'ஓ.டி.டி.,'யில் மெகா ஹிட் படங்களாக வெற்றி பெறுகின்றன.
ஓ.டி.டி.,யின் எதிர்காலம்
சினிமாவுக்கான மிகப்பெரிய எதிர்காலம், ஓ.டி.டி., தான். நிறைய சினிமாக்கள் வெளிவரும் வாய்ப்புண்டு. என்னை போன்ற படைப்பாளர்களுக்கும், வாய்ப்பு அதிகம் கிடைக்கும். அதே நேரம், ஓ.டி.டி.,யில், சினிமாக்களுக்கு 'சென்சார்' இல்லாததால், கத்தி, ரத்தம் என வன்முறை காட்சிகள் நிறைந்த படங்களையும் தவிர்க்க முடியாது.
சினிமாவில் சாதிக்க விரும்புவோருக்கு கூறும் அறிவுரை!
சினிமா துறையை பொறுத்தவரை, முயற்சி அவசியம். தடைகளை தாண்டுகிற, போட்டிகளை எதிர்கொள்கிற, வலிகளை தாங்குகிற சகிப்புத்தன்மை நிறைந்த மனநிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும். இது, சினிமாவுக்கானது மட்டுல்ல. பொதுவான அறிவுரை தான். இன்றைய இளைஞர்கள், சிறிய கஷ்டத்தை கூட தாங்கும் மனவலிமை இல்லாமல் உள்ளனர். வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்பதை உணர வேண்டும்.
அரசியல் சார்ந்த பயணம் குறித்து...
தற்போது, அவ்வளவாக அரசியல் களம் செல்வதில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் கவியரங்கம், மேடை பேச்சில் பங்கேற்க செல்கிறேன். இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் அரசியல் ஆர்வம் குறைவாக இருக்கிறது. நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்கும் கடமையை, இளைஞர்கள் உணர வேண்டும்; அனைவரும் ஓட்டளிக்க வேண்டும். மாணவ பருவத்தில் இருந்தே அரசியல் அறிவு மற்றும் அரசியல் பார்வையை விசாலமாக்கிக் கொள்ள வேண்டும்.