இரண்டு வாரமாக தாக்குப் பிடிக்கும் 'கூலி' | ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் தீபாவளிக்கு ரிலீஸ் | சிம்பு படத்துக்கு தயாரிப்பாளர் மாற்றமா? | லடாக்கில் சிக்கித் தவிக்கும் மாதவன் | 'கூலி'க்கு 'யுஏ' சான்று கேட்ட வழக்கு தள்ளுபடி | பிளாஷ்பேக் : விஜயகாந்த் பட தலைப்புக்கு அனுமதி மறுத்த தணிக்கை குழு | பிளாஷ்பேக் : சிவாஜி, பத்மினியை சேர்த்து வைத்த பணம் | என் குழந்தைகளுக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் அப்பா : ஜாய் கிரிசில்டா பரபரப்பு புகார் | 50 ஆண்டு சாதனை, ரஜினிக்கு பாராட்டு விழா : விஷால் பேட்டி | 'எல்ஐகே' அல்லது 'டியூட்' : ஏதாவது ஒன்றுதான் தீபாவளி ரிலீஸ் |
'சாஹோ' பட இயக்குனர் சுஜித் இயக்கத்தில் நடிகர் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஓ.ஜி' . பிரகாஷ் ராஜ், பிரியங்கா மோகன், அர்ஜுன் தாஸ், ஸ்ரேயா ரெட்டி, இம்ரான் ஹாஸ்மி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். டிவிவி நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.
ஏற்கனவே இப்படம் கடந்த வருட செப்டம்பர் 27ம் தேதி அன்று திரைக்கு வருவதாக இருந்தது. இதற்கிடையில் பவன் கல்யாண் தேர்தலில் வெற்றி பெற்று துணை முதல்வர் ஆனார். இதனால் ஓ.ஜி படத்தின் மீதமுள்ள படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. சமீபத்தில் இந்த படத்தின் மீதமுள்ள படப்பிடிப்பை துவங்கினர். இந்த நிலையில் இத்திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதியை இன்று அறிவித்துள்ளனர். அதன்படி, ஓ.ஜி படம் வருகின்ற செப்டம்பர் 25ம் தேதி அன்று திரைக்கு வருகிறது என அறிவித்துள்ளனர்.