அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
மலையாளத்தில் ஒளிப்பதிவாளராக சினிமாவில் நுழைந்து பின்னர் மம்முட்டி நடித்த பிக் பி என்கிற கல்ட் கிளாசிக் படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் அமல் நீரத். பிரித்விராஜ் நடித்த அன்வர், பஹத் பாசில் நடித்த வரதன், துல்கர் சல்மான் நடித்த காம்ரேட் இன் அமெரிக்கா என சீனியர் ஜூனியர் முன்னணி நடிகர்கள் பலரையும் வைத்து படங்களை இயக்கியுள்ளார். கடந்த வருடம் பஹத் பாசில் மற்றும் குஞ்சாகோ போபன் இணைந்து நடித்த போகன் வில்லா என்கிற படத்தை இவர் இயக்கினார். இந்த நிலையில் அடுத்ததாக இவர் மோகன்லால் படத்தை இயக்க இருக்கிறார். வரும் அக்டோபர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.
மோகன்லால், அமல் நீரத் இருவரின் தயாரிப்பு நிறுவனங்களுமே இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றன. இதற்கு முன்பாக கடந்த 2009ல் மோகன்லாலை வைத்து சாகர் அலைஸ் ஜாக்கி என்கிற படத்தை அமல் நீரத் இயக்கியிருந்தார். அந்த படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றாலும் அதன் பிறகு இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பு அமையவில்லை. இந்த நிலையில் 16 வருடங்கள் கழித்து இவர்கள் மீண்டும் இந்த புதிய படத்தில் இணைவதால் படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகம் எழுந்துள்ளது.