பவிஷ் ஜோடியாகும் குஷ்பு மகள் அவந்திகா | நான் ஏன் பிறந்தேன், குரு சிஷ்யன், ஆம்பள - ஞாயிறு திரைப்படங்கள் | கோர்ட் உத்தரவை மீறி பேட்டி : மன்னிப்பு கேட்ட ரவி மோகன் | சென்னையில் தான் இருக்கிறேன், ஐதராபாத்தில் குடியேறவில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | ரேனிகுண்டா 2 படத்தின் முதல் பார்வை வெளியீடு | சூர்யாவை தொடர்ந்து அர்ஜூனுக்கும் வெற்றி : 50 கோடியை நெருங்கும் பிளாஸ்ட் | மஞ்சும்மல் பாய்ஸ் மாதிரி தமிழகத்தில் பாலன் ஓடுமா? | அரசன் படத்திற்காக 2 மாதங்களாக இரவில் நடக்கும் படப்பிடிப்பு | 'லிங்கம்' வெப் சீரீஸ் 26ம் தேதி வெளியாகிறது | இங்கிலாந்து மன்னரின் 'சர்' பட்டம் பெற்ற ஹாலிவுட் நடிகர் |

ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான படம் பாகுபலி. கடந்த 2015ம் ஆண்டில் முதல் பாகம் வெளியான நிலையில் 2017ல் இரண்டாம் பாகமும் வெளியானது. இந்நிலையில் சமீபத்தில் பாகுபலி திரைக்கு வந்து பத்தாம் ஆண்டு கொண்டாட்டம் நடைபெற்றது. அப்போது பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களையும் இணைத்து ‛பாகுபலி தி எபிக்' என்ற பெயரில் அக்டோபர் 31ம் தேதி ரீரிலீஸ் செய்யப் போவதாக அறிவித்தார்கள்.
இந்நிலையில் இந்த படத்தை வரவேற்று சோசியல் மீடியாவில் பலரும் கருத்து வெளியிட்டார்கள். குறிப்பாக, புக் மை ஷோ- வில் இந்த படத்தை பார்ப்பதற்கு ஒரே வாரத்தில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விருப்பம் தெரிவித்துள்ளார்கள். அதோடு, இப்படி ஒரு செய்தி வெளியானதை அடுத்து, பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களையும் இணைத்து 5 மணி நேரம் 27 நிமிடங்கள் ஓடக்கூடிய வகையில், வெளியிட இருப்பதாக சோசியல் மீடியாவில் ஒரு செய்தி வெளியானது. ஆனால், அந்த செய்தியை அப்படக் குழு மறுத்துள்ளது.
இந்த படத்தின் நீளம் ஒரு ஐபிஎல் போட்டி நேரத்திற்கு சமமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்கள். கூடிய சீக்கிரமே பாகுபலி தி எபிக் படத்தின் அதிகாரப்பூர்வ ரன்னிங் டைம் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்கள்.