எங்கள் மண வாழ்க்கை ரகசியம் - 'சரிம்மா, சாரிம்மா': நடிகை ரோஜா | ஆஸ்கருக்கு செல்லும் 2 தமிழ் படங்கள் | 8 வருடங்களுக்கு பிறகு தமிழ் திரையில் ருஹானி சர்மா | தேர்தல் கமிஷன் தூதர் பதவியில் இருந்து நீது சந்திரா நீக்கம் | பிளாஷ்பேக்: பாலச்சந்திரமேனன் இயக்கிய தமிழ் படம் | பிளாஷ்பேக்: நிலவொளியில் ஒளிப்பதிவு செய்த முதல் ஒளிப்பதிவாளர் | ‛வாரணாசி' படத்தில் நடிக்க 30 கோடி சம்பளம் வாங்கிய பிரியங்கா சோப்ரா! | பிளாஷ்பேக்: எம் ஜி ஆர், சிவாஜியை மீண்டும் ஒரு படத்தில் நடிக்க வைக்க விரும்பிய ஏ வி எம் | திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் ஆளுங்கட்சி தலையீடு: தயாரிப்பாளர்கள் குமுறல் | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? |

தேசிய விருது பெற்ற தெலுங்கு இயக்குனர் ராகுல் ரவீந்திரநாத் இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள படம் 'தி கேர்ள் பிரண்ட்'. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக தீக்ஷித் ஷெட்டி நடித்துள்ளார். வருகிற நவம்பர் 7ம் தேதி 5 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தின் சென்சார் சான்றிதழ் மற்றும் ரன்னிங் டைம் தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.
அதில், இந்த 'தி கேர்ள் பிரண்ட்' படத்திற்கு யுஏ சான்றிதழ் கிடைத்திருப்பதாகவும், இப்படம் 138 நிமிடங்கள், அதாவது 2 மணி நேரம் 18 நிமிடங்கள் ஓடக்கூடியது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தில் ராம் ரமேஷ், ரோகினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள நிலையில், அணு இம்மானுவேல் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.