'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் | அஜித் 64 அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள் | 26வது பிறந்தநாளை தந்தையுடன் கொண்டாடிய திலீப் மகள் ; தாயுடன் பத்து வருடமாக பாராமுகம் | போலி 'ஏஐ' வீடியோக்கள் : 'துரந்தர்' இயக்குனர் ஆதித்ய தர் எச்சரிக்கை | இனி இந்த ஜானரில் படங்களை இயக்கப் போவதில்லை ; இயக்குனர் பிரியதர்ஷன் முடிவு | உஸ்தாத் பகத்சிங் : ரூ.100 கோடி மேல் நஷ்டம் வருமா? | ஒரே நாளில் தெலுங்கில் வெளியாகும் இரண்டு தமிழ்ப் படங்கள் |

கன்னட சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவர் சிவராஜ் குமார். நேற்று அவரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் 131வது படத்தை அறிவித்துள்ளனர். இந்த படத்தை தமிழில் ‛பாயும் ஒளி நீ எனக்கு' என்கிற படத்தை இயக்கிய கார்த்திக் அத்வைத் இயக்குகிறார். இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இசையமைக்கிறார். இதன் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளனர். ஆனால் படத்திற்கு இன்னும் தலைப்பை அறிவிக்கவில்லை. முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்து படப்பிடிப்பு நடக்க உள்ளது. படத்தின் போஸ்டரில் சிவராஜ்குமார் துப்பாக்கி தயாரிப்பது போன்று உள்ளது. மேலும் பின்னணியில் நிறைய துப்பாக்கிகளும் காணப்படுகின்றன. இதை வைத்து பார்க்கையில் இப்படம் ஒரு அதிரடியான ஆக் ஷன் கதைக்களத்தில் கேங்ஸ்டர் அல்லது போலீஸ் பின்னணியில் உருவாகும் படமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.




