2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

கன்னட சினிமாவின் முன்னணி நடிகரான சிவராஜ்குமார் சமீபகாலமாக தமிழ் சினிமாவோடும், தமிழ் ரசிகர்களோடும் அதிகம் நெருக்கம் காட்டி வந்திருக்கிறார். குறிப்பாக 'ஜெயிலர்' படம் மூலம் தமிழ் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றார். மேலும் தனுஷின் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற டிசம்பர் 15ம் தேதி திரையரங்கில் வெளியாகிறது.
இந்த நிலையில், கன்னடத்தில் அவர் புதிதாக நடித்துள்ள படம் 'கோஸ்ட்'. இப்படத்தில் அனுபம் கெர், ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் தயாரித்துள்ள இப்படத்தை ஸ்ரீனி இயக்கியுள்ளார். அர்ஜுன் ஜன்யா இசையமைதுள்ளார். இப்படம் வருகிற 19ம் தேதி வெளியாகிறது. இதனால் அதன் ப்ரோமோஷன் பணிகளில் சிவராஜ்குமார் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் மும்பை சென்றுள்ள சிவராஜ்குமார் அங்கு தங்கியிருக்கும் கமலை சந்தித்து பேசி உள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.