குட் பேட் அக்லி டிரைலர் எப்போது? | பழம்பெரும் ஹிந்தி நடிகர் மனோஜ் குமார் காலமானார் | ஏப்ரல் முதல் வாரம் முழுவதும் நெட்பிளிக்ஸ் ஆதிக்கம் | ரூ.52 கோடி வசூலுடன் வலம் வரும் வீர தீர சூரன் | 'இட்லி கடை' புதிய வெளியீட்டுத் தேதி எப்போது? | 'குட் பேட் அக்லி' முன்பதிவு இன்று முதல் ஆரம்பம் | பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் |
கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம், ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், சிம்ரன், விநாயகன் உட்பட பலரது நடிப்பில் உருவாகி உள்ள படம் துருவ நட்சத்திரம். இந்த படம் வருகிற நவம்பர் 24ம் தேதி திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தான் அளித்த ஒரு பேட்டியில், இந்தப்படம் திட்டமிட்டபடி திரைக்கு வரவில்லை என்பதால், என்னை பார்க்கும் அனைவருமே துருவ நட்சத்திரம் எப்போது ரிலீஸ்? என்றுதான் கேள்வி கேட்டார்கள். இதனால் ஒரு கட்டத்தில் துருவ நட்சத்திரம் படம் ரிலீஸ் ஆகுமா என்று எனக்கே சந்தேகம் ஏற்பட்டது. என்றாலும் தற்போது ஒரு வழியாக திரைக்கு வருவதற்கு தயாராகிவிட்டது.
இந்த படத்தில் விக்ரம் கேரக்டர் எந்த ஒரு சிக்கலான காலகட்டமாக இருந்தாலும் மிகவும் கூலாக எடுத்துச் சொல்லும் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. அதோடு ஜெயிலர் படத்தில் வில்லனாக நடித்திருந்த விநாயகன் இந்த படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடித்துள்ளார். அவரை இதுவரை இதுபோன்ற ஒரு கேரக்டரில் யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். அதோடு எனது முந்தைய படங்களின் கேரக்டர்கள் ரொம்பவே உருகி உருகி காதலிப்பார்கள். ஆனால் இந்த படத்தில் வித்தியாசமான ரொமான்ஸ் இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார் கவுதம் மேனன்.