தங்கலான் படத்திற்காக அதிகம் மெனக்கெட்டேன்: மனம் திறந்த மாளவிகா மோகனன் | திருமணம், குழந்தை பெற்றுக் கொள்வதுதான் முழுமையான வாழ்க்கையா : சமந்தா கேள்வி | ஸ்வீட் ஹார்ட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | மணிரத்னத்துடன் எடுத்த போட்டோ : ராஜ்குமார் பெரியசாமி நெகிழ்ச்சி | வெளியானது 'விடாமுயற்சி' படம்: ரசிகர்களுடன் படம் பார்த்த திரை பிரபலங்கள் | பிளாஷ்பேக் : படப்பிடிப்பிற்கே வந்து நடிகையை கடத்த முயன்றவர்களை அடித்து துரத்திய கொச்சின் ஹனீபா | தான் நடத்திய வழக்கை படமாக இயக்கும் வழக்கறிஞர் | கேரளாவில் இருந்து நடந்தே வந்து விஜய்யை சந்தித்த ரசிகர் | ராஷ்மிகாவுக்கு உதவி செய்யாத விஜய் தேவரகொண்டா ; நெட்டிசன்கள் கண்டனம் | திலீப் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் மோகன்லால் |
பெங்களூரு : பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், புற்று நோய் அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார்.
கன்னட திரை உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவராஜ்குமார், 62. இவர் மறைந்த பிரபல கன்னட நடிகர் ராஜ்குமாரின் மகன். தமிழில் நடிகர் ரஜினியுடன் இணைந்து ஜெயிலர், தனுஷ் உடன் கேப்டன் மில்லர் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில், இவரது பைரதி ரங்கல் திரைப்படம் வெளியாகி பெரிய வெற்றியை பெற்றது. இதன் வெற்றி விழாவில் பேசிய சிவராஜ்குமார், தன் உடல்நிலை குறித்து சில தகவல்களை கூறினார்; விரைவில் அறுவை சிகிச்சை செய்ய உள்ளதாகவும் கூறியிருந்தார். அவருக்கு புற்று நோய் பாதிப்பு இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், தனக்கு ஏற்பட்ட நோய் பாதிப்பு குறித்து, அவர் வெளிப்படையாக எதுவும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் பெங்களூரில் இருந்து, அமெரிக்காவின் புளோரிடாவுக்கு விமானத்தில் புறப்பட்டு சென்றார். அவருடன் மனைவி கீதாவும் சென்றார். புளோரிடாவில் உள்ள மியாமி கேன்சர் இன்ஸ்டிடியூட்டில் வரும் 24ம் தேதி அவருக்கு அறுவை சிகிச்சை நடக்கிறது. அங்கு வசிக்கும், கர்நாடகாவை சேர்ந்த டாக்டர் கோபால், அறுவை சிகிச்சை செய்ய உள்ளார். அதன்பின், ஒரு மாதம் அங்கு ஓய்வில் இருக்கும் சிவராஜ்குமார் அடுத்த மாத இறுதியில் பெங்களூரு திரும்புகிறார்.