‛பேபி ஜான்' படம் ‛தெறி' படத்தின் முழுமையான ரீமேக் அல்ல : இயக்குனர் அட்லி | ரஜினி பெரிய நடிகர் என்பதே தெரியாது: சொல்கிறார் நயன்தாரா | வெங்கட் பிரபுவா... சிவாவா... - யாரை டிக் செய்ய போகிறார் அஜித் | பிப்ரவரி மாதத்தில் துவங்கும் தனுஷ் - விக்னேஷ் ராஜா படம் | துல்கர் சல்மான் படத்தில் இணைந்த எஸ்.ஜே. சூர்யா, பிரியங்கா மோகன் | ஜெய் நடிக்கும் ‛பேபி அண்ட் பேபி' | புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை : அமெரிக்கா சென்ற சிவராஜ்குமார் | அருண் விஜய்யின் அன்புக்கு தலைவணங்கிய சிவகார்த்திகேயன் | பீம்லா நாயக் புகழ் இசைக்கலைஞர் பத்மஸ்ரீ மொகிலையா காலமானார் | என்னுடன் கூட்டணி சேர்ந்த போதெல்லாம் சந்தோஷ சிவன் தேசிய விருது பெறுகிறார் : மோகன்லால் பெருமிதம் |
பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வணங்கான் திரைப்படம் வரும் பொங்கல் ரிலீஸ் ஆக வெளியாக இருக்கிறது. அதை முன்னிட்டு நேற்று முன்தினம் இந்த படத்தில் இசை வெளியீட்டு விழாவும் மற்றும் பாலாவின் 25 வது வருட திரை உலக பயணம் கொண்டாட்ட விழாவும் ஒன்றாக நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக திரையுலகை சேர்ந்த ஏராளமான பிரபலங்கள் வருகை தந்தார்கள். அதில் ஒரு பக்கம் தற்போது பாலாவுடன் கருத்து வேறுபாட்டில் உள்ள சூர்யா, விக்ரம் வருவார்களா என்று தான் பலரும் ஆவலாக எதிர்பார்த்தார்கள். அதில் சூர்யா வந்து கலந்து கொண்டு தனது அன்பை வெளிப்படுத்தினார். விக்ரம் வரவே இல்லை.
ஆனால் இதில் எதிர்பாராத இன்னொரு விஷயம் என்ன என்றால் நடிகர் சிவகார்த்திகேயனின் வருகைதான். காரணம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சிவகார்த்திகேயன் நடித்த சீமராஜா படத்தின் டிரைலர் வெளியான போது அருண் விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் “நீ எல்லாம் ஒரு மாஸ் ஹீரோவா ? யாரெல்லாம் மாஸ் பண்றதுன்னு ஒரு விவஸ்தை இல்லாமல் போச்சு.. தமிழ் ஆடியன்ஸ் திறமைக்கு மட்டும்தான் மதிப்பு கொடுப்பார்கள்” என்பது போன்று ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அப்போது அனைவருமே சிவகார்த்திகேன் குறித்து தான் அருண்விஜய் இப்படி பேசுகிறார் என்று சொல்ல மிகப்பெரிய சலசலப்பு கிளம்பியது.
ஆனால் அருண் விஜய் தனது ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு விட்டது என்றும் சற்று முன்பு தான் சரி செய்யப்பட்டது, அதனால் அதற்கு முன்பு வந்த பதிவுகளை யாரும் பொருட்படுத்த வேண்டாம் என்று கூறியதுடன் இத்தனை வருடங்களாக சினிமாவில் இருக்கும் எனக்கு கடின உழைப்பு மற்றும் பொறுமையின் மதிப்பு தெரியும். இங்கு பெரியவர்கள் சிறியவர்கள் என யாரும் கிடையாது. நான் திறமைக்கு மரியாதை கொடுப்பவன். நான் யாரையும் இழிவுபடுத்தியது கிடையாது. படுத்த நினைத்ததும் கிடையாது. நடிகர்களுக்கிடையே இருக்கும் சகோதரத்துவத்தை திசை திருப்பாதீர்கள்” எனவும் புதிய பதிவு ஒன்றை வெளியிட்டார். இதைத்தொடர்ந்து அந்த சலசலப்பு அப்போதைக்கு ஓரளவு அடங்கியது.
இந்த நிலையில் தான் வணங்கான் பட இசை வெளியீட்டுக்கு வந்த சிவகார்த்திகேயன், நடிகர் பாலாவிற்கு வாழ்த்து செல்வதற்காக தான் வந்துள்ளார் என்று முதலில் பேசப்பட்டது. ஆனால் அதன் பிறகு மேடையில் பேசிய சிவகார்த்திகேயன் , “அருண்விஜய் அண்ணா தான் இந்த விழாவிற்கு நீ கட்டாயம் வரவேண்டும் தம்பி என கூப்பிட்டார். அதனால் வந்துள்ளேன். எப்போதுமே விட்டுக் கொடுக்காமல் முயற்சி செய்வதுதான் அவருடைய உண்மையான வெற்றியாக நான் பார்க்கிறேன். ஒரு தம்பியாக அவரது இந்த படத்தின் வெற்றிக்கு நான் வாழ்த்துகிறேன்” என்று கூறி அருண் விஜய் குறிப்பிட்ட அந்த சகோதரத்துவத்தை அங்கே அழகாக அன்புடன் வெளிப்படுத்தினார். மேலும் அந்த நிகழ்விலும் இருவரும் அருகருகே அமர்ந்து மகிழ்ச்சியுடன் உரையாடிக் கொண்டும் இருப்பதை பார்க்க முடிந்தது. இவர்களைப் பின்பற்றி இப்போதும் எதிரெதிராக முறைத்துக் கொண்டிருக்கும் இன்னும் ஒரு சில ஹீரோக்கள் நட்புக்கரம் கோர்த்தால் நல்லதே.