சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
கடந்த சில தினங்களுக்கு முன்பு அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் வெளியான புஷ்பா 2 திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்ப்பதற்காக ஐதராபாத்தில் உள்ள சந்தியா என்கிற திரையரங்கிற்கு தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வந்த ரேவதி என்கிற பெண் அந்தக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். அந்த சமயத்தில் அந்த திரையரங்கில் அல்லு அர்ஜுன் படம் பார்க்க வந்ததால் அவரைப் பார்க்க கூட்டம் முண்டியடித்த போது இந்த தள்ளுமுள்ளு ஏற்பட்டு ரேவதி உயிரிழக்க காரணமாக அமைந்தது. அது மட்டுமல்ல ரேவதியின் மகன் ஸ்ரீ தேஜ் காயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது மருத்துவர்கள் அவன் மூளைச்சாவு அடைந்துள்ளதாக கூறியுள்ளார்கள்.
இந்த நிகழ்வு நடைபெறுவதற்கு அல்லு அர்ஜுன் தான் காரணம் எனக் கூறி அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அதன்பின் கைதும் செய்யப்பட்டு ஒரு நாள் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் தற்போது அவர் ஜாமீனில் வெளிவந்துள்ளார். அவர் கைது செய்யப்பட்டதற்கு பல இடங்களில் இருந்தும் கண்டனங்கள் குவிந்தன. குறிப்பாக அல்லு அர்ஜுன் மற்றும் அவரது படங்கள் குறித்து விமர்சிக்கக்கூடிய இயக்குனர் ராம்கோபால் வர்மா கூட அல்லு அர்ஜுனின் இந்த கைது ஏற்கக் கூடியது அல்ல இதற்கு எதிராக திரையுலகம் ஒன்று திரள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நான் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஷனாஷனம் என்கிற படத்தை இயக்கினேன். அந்த படத்தில் நடித்த ஸ்ரீதேவியை பார்ப்பதற்கு படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் லட்சக்கணக்கான கூட்டம் திரண்டது. அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் மூன்று ரசிகர்கள் உயிரிழந்தனர். அப்படி என்றால் போலீஸார் சொர்க்கத்திற்கு சென்று இப்போது ஸ்ரீதேவியை கைது செய்யப் போகிறார்களா என்ன? சினிமாக்காரர்கள், அரசியல்வாதிகள் ரொம்பவே பிரசித்தி பெற்றவர்களாக இருப்பதற்கு எதிராக செய்யப்படும் குற்றம் தான் இந்த கைது நடவடிக்கை” என்று கூறியுள்ளார் ராம் கோபால் வர்மா.