'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
கன்னடத் திரையுலகத்தில் மறைந்த நடிகர் ராஜ்குமார் குடும்பத்தினருக்கென தனி மரியாதை உள்ளது. அவர்கள் குடும்பத்தினர் திரையுலகத்தில் தலையிட்டால் மற்றவர்கள் அதற்கு எதிர்ப்பு கருத்துக்களைத் தெரிவிக்கத் தயங்குவார்கள்.
நடிகர் ராஜ்குமாரின் மகன் சிவராஜ்குமார் கன்னடத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவர். ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த 'ஜெயிலர்' படத்திலும் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். நேற்று பெங்களூருவில் தமிழ் நடிகர் சித்தார்த் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் கன்னட அமைப்பினர் வந்து தகராறு செய்து சித்தார்த்தை வெளியேற வைத்தனர்.
அதற்கு கன்னட நடிகரான பிரகாஷ்ராஜ் நேற்றே வருத்தம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் காவிரி போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து கன்னடத் திரையுலகினர் இன்று ஆர்பாட்டம் நடத்தினர். அதில் பேசிய சிவராஜ்குமார், கன்னடத் திரையுலகம் சார்பாக மனப்பூர்வமான மன்னிப்பைக் கேட்டுக் கொள்வதாகவும், எல்லா மொழி நடிகர்களுக்கும் கன்னட ரசிகர்கள் வரவேற்பு தருவார்கள். எல்லா மொழிப் படங்களையும் கன்னட ரசிகர்கள் பார்ப்பார்கள்,” என்று தெரிவித்தார்.