ராகினி எம்எம்எஸ் 3 திரில்லர் படத்தில் இணைந்த தமன்னா | தமிழைப் போலவே தெலுங்கிலும் அதிக தியேட்டர்களில் வெளியாகிறது கருப்பு | பெத்தி பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி | கிரிக்கெட் வீரர் பயோபிக்கில் மீண்டும் இணையும் 'லகான்' கூட்டணி | அதிக பட்ஜெட், அதிக சம்பளம் : மாரி செல்வராஜ் படத்துக்கு சிக்கலா? | ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணையும் படம் இந்த சூழ்நிலையில் நடக்குமா? | திருப்பதி கோயிலில் சமுத்திரக்கனி வழிபாடு : விஜய்க்கு வாழ்த்து | திருமாவளவனை மறைமுகமாக விமர்சித்த நடிகை சனம் ஷெட்டி | பிரேமலு காமெடி நடிகருடன் மமிதா பைஜு ஜோடியாக நடிக்கும் புதிய படம் துவக்கம் | பெத்தி படப்பிடிப்பு தளத்திற்கு இயக்குனர் சுகுமாருடன் விசிட் அடித்த சிரஞ்சீவி |

மலையாள திரையுலகில் வளர்ந்து வரும் இளம் முன்னணி நடிகர் ஷேன் நிகம். கடந்த வருடங்களில் வெளியான ஆர்டிஎக்ஸ், வெயில் என தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்து வரும் அவர் சமீபத்தில் தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் வெளியாகி வரவேற்பை பெற்ற பல்டி படத்திலும் கதாநாயகனாக நடித்திருந்தார். அவரது அடுத்த படமாக ஹால் என்கிற படம் மலையாளத்தில் உருவாகியுள்ளது. சமீபத்தில் இந்தப் படம் சென்சார் சான்றிதழுக்காக அனுப்பப்பட்டது. படத்தைப் பார்த்த அதிகாரிகள் 19 இடங்களில் காட்சிகளை வெட்ட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
அது மட்டுமல்ல ஒரு பாடல் காட்சியில் ஒரு சிலர் மாட்டு இறைச்சி பிரியாணி சாப்பிடுவது குறிப்பிட்ட ஒரு பிரிவினரை சுட்டிக்காட்டுவது போல இருக்கிறது என்றும் கூறி அவற்றையும் நீக்க வலியுறுத்தி உள்ளனர். இதனை தொடர்ந்து தங்கள் கருத்து சுதந்திரம் பாதிக்கப்படுவதாக கூறி கேரள உயர் நீதிமன்றத்தை அணுகி மனு தாக்கல் செய்துள்ளனர் ஹால் படக்குழுவினர். சமீபகாலமாக மலையாள படங்கள் தொடர்ந்து இப்படி சென்சாரின் கிடுக்கிப்பிடிக்கு ஆளாவது தொடர்கதையாக மாறி உள்ளது..