முதல்வர் விஜய் இரட்டை வேடம் போடுங்க : கூல் சுரேஷ் திடீர் வேண்டுகோள் | அண்ணன் இளையராஜா பற்றி தவறான தகவல் பரப்பாதீர்கள் : தம்பி கங்கைஅமரன் ஆதங்கம் | அண்ணன் சூர்யா நடித்த நிறுவனத்தில் அடுத்து தம்பி கார்த்தி | சைக்கலாஜிகல் திரில்லராக உருவாகியுள்ள ‛இரட்டையர்' | 30 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடிப்புக்குத் திரும்பிய மீனாட்சி சேஷாத்திரி | ‛கருப்பு ஸ்டார்' பட்டம் கொடுத்த ரசிகருக்கு திரிஷாவின் பதில் | ‛வாரண்ட்' வெப்சீரிஸில் கணக்கிலடங்கா ஆபாச வார்த்தைகள் | ‛பெத்தி' படத்துக்காக ராம்சரணுக்கு தேசிய விருது நிச்சயம் ; நடிகர் ரவிகிஷன் உறுதி | அமிதாப் பச்சன் இனியும் இதை தொடரலாமா ? விவாதத்தை துவங்கிய நெட்டிசன்கள் | முதல்வர் விஜய்க்கு டைம் கொடுங்க : குஷ்பு |

க்யூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் ஷெரீப் முஹம்மது தயாரிக்கும் ஆக்ஷன் திரில்லர் படமான “காட்டாளன்” படத்தின், பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் முன்னணி நடிகர் ஆண்டனி வர்கீஸின் தோற்றம் வெளியாகியுள்ளது.
புதிய இயக்குநர் பால் ஜார்ஜ் இயக்கத்தில் உருவாகும் “காட்டாளன்” மலையாளத் திரையுலகில் இதுவரை இல்லாத அளவுக்கு பிரமாண்ட பூஜையுடன் துவங்கப்பட்டது. பான்-இந்தியா படமாக உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடந்தபோது, யானை சம்பந்தமான சண்டைக்காட்சியில் ஆண்டனி காயம் அடைந்தார்.
'ஆங்-பாக்' படத்தொடரின் ஆக்ஷன் இயக்குநர் கேச்சா காம்பக்டீ மற்றும் அவரது நிபுணர் குழுவே இந்த ஆக்ஷன் காட்சிகளை அமைத்துள்ளனர். 'ஆங்-பாக்' படத்தில் புகழ்பெற்ற யானை பொங் இதிலும் நடித்துள்ளது.
'காந்தாரா, மகாராஜா' படங்களுக்கு இசையமைத்த அஜனீஷ் லோக்நாத், இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இதில் தெலுங்கு நடிகர் சுனில், கபீர் துகான் சிங், ராப்பர் பேபி ஜீன், தெலுங்கு நடிகர் ராஜ் திரண்டாசு, பாலிவுட் நடிகர் பார்த்த் திவாரி ஆகியோரும் நடிக்கின்றனர்.
திரைக்கதை ஜோபி வர்கீஸ், பால் ஜார்ஜ், மற்றும் ஜெரோ ஜேக்கப் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மற்றும் ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் படம் விரைவில் வெளியாகிறது.




