அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
தெலுங்கு திரையுலகத்தில் அறிவிக்கப்பட்டு வாபஸ் பெறப்பட்ட தியேட்டர் ஸ்டிரைக் விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆந்திர துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாண் தரப்பிலிருந்து வந்த எதிர்ப்பு காரணமாக அந்த ஸ்டிரைக் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது. அதன்பின் பிரபல தயாரிப்பாளர்கள், தியேட்டர் ஓனர்களான அல்லு அரவிந்த், தில் ராஜு பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கம் கொடுத்தனர்.
இதனிடையே, தான் நடித்து ஜுன் 12ம் தேதி வெளியாக உள்ள 'ஹரிஹர வீர மல்லு' படத்திற்கும் டிக்கெட் கட்டண உயர்வு கோரும் விண்ணப்பத்தை தயாரிப்பாளர் தெலுங்கு பிலிம் சேம்பர் வழியாகத்தான் அரசுக்கு அளிக்க வேண்டும் என பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
அது மட்டுமல்லாது ஆந்திர மாநிலத்தில் உள்ள தியேட்டர்களில் பாப்கார்ன், கூல்டிரிங்ஸ், குடிநீர் உள்ளிட்டவற்றை மிக அதிக விலைக்கு விற்கும் தியேட்டர்கள் பற்றி விசாரணை நடத்த வேண்டும் என சம்பந்தப்பட்ட துறைக்கு உத்தரவிட்டுள்ளார். சுத்தமான குடிநீர், சுகாதாரம் ஆகியவற்றை அளிப்பதில் தியேட்டர்கள் முறையாக இருக்க வேண்டும். அது தியேட்டர் ஓனர்களின் அடிப்படையான பொறுப்பு எனக் கூறியுள்ளார்.
ஆந்திர அரசு வகுத்து வரும் விரிவான திரைப்பட மேம்பாட்டுக் கொள்கையில் சேர்க்க, தெலுங்கு திரைப்பட சங்கங்கள் மற்றும் அமைப்புகளிடமிருந்து திரைப்படத் துறையை வளர்ப்பதற்கான பரிந்துரைகளைப் பெற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
தியேட்டர் ஸ்டிரைக் விவகாரத்தின் பின்னணியில் இருப்பவர்கள் பற்றி விசாரணை நடத்தப்படும் என்றும் கூறியுள்ள பவன், ராஜமுந்திரி பகுதியைச் சேர்ந்த அவரது கட்சி பொறுப்பாளர் ஒருவரை இந்த விவகாரத்திற்காக கட்சியை விட்டும் நீக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.