சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

100 வயதை கடந்த முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு. தற்போது முதுமை காரணமாக பல்வேறு உடல்நல பிரச்னைகளை சந்தித்து வருகிறார். சமீபத்தில் தனது வீட்டில் தவறி விழுந்து தலையில் காயம் அடைந்தார். இதற்கான தனியார் மருத்துவமனையில் சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், நேற்று நடிகரும், தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன் மருத்துவமனைக்கு சென்று நல்லகண்ணுவிடம் நலம் விசாரித்தார். அவருடன் 'அயலான்' பட இயக்குனர் ரவிக்குமாரும் உடன் சென்றார்.
சிவகார்த்திகேயன் நல்லகண்ணு மீது தனிப்பட்ட அன்பு கொண்டவர். அவரது பிறந்த நாளுக்கு நேரில் சென்று அவரிடம் ஆசி பெறுவதையும் வழக்கமாக வைத்திருந்தார்.




