கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் | நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் | 'திரெளபதி' இரண்டாம் பாகத்தில் சரித்திர கதை | பிளாஷ்பேக் : காமெடி நாயகனாக விஜயகாந்த் நடித்த படம் | சிரிப்பு சத்தம், காமெடி பஞ்சத்தில் தவிக்கும் தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : உலகம் முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோற்ற கதை |
மாடலிங் துறையில் இருந்து சினிமாவிற்கு வந்தவர் ஷரிதா ராவ். ஏராளமான விளம்பர படங்களில் நடித்துள்ளார். ‛ஆற்றல், படவா, தேடி தேடி பார்த்தேன்' உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் கதையின் நாயகியாக புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
இதில் அவர் அறிமுக நடிகர் ராஜ் அய்யப்பா ஜோடியாக நடிக்கிறார். ராஜன் ரவி இயக்குகிறார். மிஸ்டர் பிக்சர்ஸ ஸ்டூடியோ சார்பில் ஜெயலட்சுமி, காந்தாரா ஸ்டூடியோ இணைந்து தயாரிக்கிறது. பிரேம்ஜி, ஸ்ரீநாத், சவுந்தர்யா சரவணன், சிபி ஜெயக்குமார் ஆகியோர் நடிக்கின்றனர். கிரண்குமார் ஒளிப்பதிவு செய்கிறார், பாலா சுப்ரமணியன் இசை அமைக்கிறார். பூஜையுடன் இதன் படப்பிடிப்பு துவங்கியது.