டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் | நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் | 'திரெளபதி' இரண்டாம் பாகத்தில் சரித்திர கதை | பிளாஷ்பேக் : காமெடி நாயகனாக விஜயகாந்த் நடித்த படம் | சிரிப்பு சத்தம், காமெடி பஞ்சத்தில் தவிக்கும் தமிழ் சினிமா |
கேப்டன் பிரபாகரன் ரீ ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. கடந்த 6 நாட்களில் 5 கோடிவரை வசூலித்து கடந்த வார வின்னர் ஆகி உள்ளது. கேப்டன் பிரபாகரனை ரீ ரிலீஸ் செய்த கார்த்திக் வெங்கடேசன் கூறியது...
‛‛விஜயகாந்தின் 73வது பிறந்த நாளையொட்டி 34 ஆண்டுகளுக்குபின் கேப்டன் பிரபாகரன் ரீ ரிலீஸ் ஆனது. இப்போது 300க்கும் அதிகமான தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்த படத்தை விஜயகாந்த் ரசிகர்கள், மற்ற ஆடியன்ஸ் கொண்டாடி வருகிறார்கள். குடும்பமாக வந்து கை தட்டி ரசிப்பதுடன் ஆட்டமா தேரோட்டமா பாடலுக்கு ஆடுகிறார்கள். இது விஜயகாந்த் குடும்பம், படக்குழுவுக்கு மகிழ்ச்சி. ஒரு மாதம் வரை படம் ஓடி, நல்ல லாபத்தை சம்பாதித்து கொடுக்கும் என நினைக்கிறோம்.
இந்த படத்துக்கு 80ரூபாய், மால்களில் 99 ரூபாய் மட்டுமே டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து தரப்பு மக்களுக்கு பார்க்க வேண்டும். இதற்குமேல் வேண்டாம் என இயக்குனர் ஆர்.கே.செல்வமணி கறாராக கூறிவிட்டார். அதற்கு பலன் கிடைத்துள்ளது. இப்போது தியேட்டர் எண்ணிக் கூடியுள்ளது.
இதற்குமுன்பு விஜய் நடித்த மெர்சல் படத்தை அவர் பிறந்த நாளுக்கு ரிலீஸ் செய்தோம். அது வரவேற்பை பெற்றது. அடுத்து அஜித், ஷாலினி நடித்த அமர்க்களம் படத்தை நவம்பர் 20ல் ரீ-ரிலீஸ் செய்யப் போகிறோம். அன்றுதான் ஷாலினி பிறந்தநாள். தவிர இந்த அண்டு அமர்க்களம் 25வது ஆண்டை கொண்டாடுகிறது. அமர்க்களத்தை அஜித் ரசிகர்களும், மற்றவர்களும் ரசிப்பார்கள் என நம்புகிறேன்'' என்றார்.