சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் | ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள் | தேவயானி அடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா? : ராஜகுமாரன் சொன்ன அதிர்ச்சி தகவல் | நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக் |
நடிகர் அஜித்குமார், 1971ம் ஆண்டு மே மாதம் ஒன்றாம் தேதி பிறந்தவர். அந்த வகையில் இன்று அவருக்கு 53 வயது முடிந்து 54ஆவது வயது பிறந்துள்ளது. பிறந்தநாள் கொண்டாடும் அஜித் குமாருக்கு ரசிகர்களும் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் அஜித்தின் மனைவியான ஷாலினி, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த 2024ம் ஆண்டு கொண்டாடிய அஜித்தின் 53 வது பிறந்தநாளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படங்களில் ஷாலினி பைக்கில் அமர்ந்திருக்க அவர் பின்னால் அஜித்குமார் அமர்ந்தபடி போஸ் கொடுக்கிறார். இன்னொரு போட்டோவில் அவர்களுடன், அவர்களது மகளும் மகனும் இடம் பெற்றுள்ளார்கள். இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் லட்சக்கணக்கில் லைக்ஸ் பெற்று வருகிறது. அதேசமயம், ஏன் இன்றைய தினம் 54வது பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்களை வெளியிடவில்லை என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.