கத்தியை அந்தரத்தில் சுழற்றியபடி கேக் வெட்டிய பாலகிருஷ்ணா | பிரேமலு 2 தாமதம் ஏன் ? தயாரிப்பாளர் தகவல் | ராம்சரண் தயாரிக்கும் முதல் படத்தின் படப்பிடிப்பில் தண்ணீர் டேங்க் உடைந்து விபத்து | பிறந்தநாள் பார்ட்டியில் போதைப்பொருள் : புஷ்பா பாடகி மீது வழக்கு பதிவு | ஊர்வசி மறுத்திருந்தால் மகள் நடிகையாகி இருக்க மாட்டார் : கண் கலங்கிய மனோஜ் கே ஜெயன் | ரிவால்வர் ரீட்டா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | அல்லு அர்ஜுனுக்கு பதில் ஜுனியர் என்டிஆரை இயக்கும் திரி விக்ரம் | நாளை வெளியாகும் ‛குபேரா' படத்தின் டிரைலர் | ‛கூலி' படத்தின் தெலுங்கு வியாபாரம் தொடங்கியது | அல்லு அர்ஜுன் - திரிவிக்ரம் சீனிவாஸ் படம் டிராப் ? |
அமரன் படத்திற்கு பின் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் மதராஸி மற்றும் சுதா இயக்கும் பராசக்தி போன்ற படங்களில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இதன்பிறகு குட் நைட் என்ற படத்தை இயக்கிய விநாயக் இயக்கும் படத்தில் நடிக்க போகிறார். சில தினங்களுக்கு முன்பு சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடிகர் அஜித் குமார், ஷாலினி உடன் இணைந்து சிவகார்த்திகேயனும் அவரது மனைவி ஆர்த்தியும் பிரிமியர் லீக் கிரிக்கெட் விளையாட்டு போட்டியை பார்த்தார்கள். அதுகுறித்த புகைப்படங்கள் அப்போது வெளியானது. இந்த நிலையில் தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தி, மகள் ஆராதனா ஆகியோருடன் கீழடி அருங்காட்சியகத்திற்கு சென்றுள்ளார். அது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.