பவழ மல்லி Vs முட்டை கலக்கி - 'யூத்'களுக்குள் கடும் போட்டி | தோழிகளுடன் பால் விளையாடி கையை முறித்துக் கொண்ட யாஷிகா | பேஷஸ் ஆப் கர- தனுஷின் கர படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியீடு | வட அமெரிக்காவில் கல்கி 2898 ஏடி படத்தின் வசூல் சாதனையை முறியடித்த துரந்தர் 2 | அண்ணன் வாரிசுகளின் பட பூஜைக்கு வந்து வாழ்த்திய பவன் கல்யாண் | முன்னணி இயக்குனர்களின் வாட்ஸ் ஆப் குழு ‛ரெய்னா' : அர்த்தம் தெரியுமா? | இது எனக்கு புது உலகம் : முதல்முறையாக வெப்சீரிஸில் நடிக்கும் சம்யுக்தா | சிவகார்த்திகேயனின் தங்கையாக நடிக்கும் மாளவிகா மனோஜ் | சினிமாக்காரர்களுக்கு ஞாயிறு கட்டாயம் விடுமுறை வேண்டும் : நிவின்பாலி வலியுறுத்தல் | சிபிஐ 6ம் பாகம் வருகிறது : இயக்குனர் மது தகவல் |

மலையாள திரையுலகில் இப்போதும் பிஸியாக படங்களை இயக்கிக் கொண்டிருக்கும் வெகு சில சீனியர் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் சத்யன் அந்திக்காடு. தற்போது மோகன்லால் நடிப்பில் ‛ஹிருதயபூர்வம்' என்கிற படத்தை இயக்கியுள்ளார். ஆக.,28 (இன்று) இந்த படம் திரையரங்குகளில் வெளியாகிறது. சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தின் டீசர் வெளியான போது அதில் நடிகர் பஹத் பாசிலின் பெயர் இடம் பெற்றிருந்தது.
இந்த நிலையில் பஹத் பாசில் குறித்து நடிகர் சத்யன் அந்திக்காடு கூறும்போது, “அவரை வைத்து நான் ஒரு இந்தியன் பிரணயகதா, ஞான் பிரகாசம் என இரண்டு படங்களை இயக்கியுள்ளேன். நானும் அவரது தந்தையும் (இயக்குனர் பாசில்) சமகாலத்து இயக்குனர்கள் என்பதால் என்னை ஆரம்பத்தில் அங்கிள் என்று தான் கூப்பிடுவார். ஆனால் என்னுடன் படத்தில் பணியாற்றிய துவங்கியபோது என்னை ஏட்டா (அண்ணன்) என்று இயல்பாக கூப்பிட துவங்கி விட்டார். அப்போது இருந்து எங்களுக்கு இடையே இருந்த அந்த வயது வித்தியாசம் காணாமல் போய்விட்டது. அதனால் அவருடன் எதையும் சகஜமாக பேசி வேலை வாங்க முடிந்தது” என்று கூறியுள்ளார்.