Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மலையாளத்தில் கதை நாயகன் ஆகும் யோகி பாபு

20 மார், 2026 - 03:01 IST
எழுத்தின் அளவு:
Yogi-Babu-becomes-the-hero-of-the-story-in-Malayalam
Advertisement

4 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்து பரவலான பாராட்டை பெற்ற தமிழ் படம் 'ஆதார்'. ராம்நாத் பழனிகுமார் இயக்கிய இந்த படத்தில் கருணாஸ், அருண் பாண்டியன், ரித்விகா, இனியா நடித்திருந்தார்கள். ஒரு எளிய மனிதன் தனது அடையாளத்திற்காக போராடும் கதை. எளிய மனிதனாக கருணாஸ் நடித்தார்.

தற்போது இந்த படம் மலையாளத்தில் ரீமேக் ஆகிறது. கருணாஸ் நடித்த கேரக்டரில் யோகி பாபு நடிக்கிறார். இதன் மூலம் மலையாளத்தில் கதை நாயகனாக அறிமுகமாகிறார் யோகி பாபு. தமிழில் இயக்கிய ராம்நாத் பழனிகுமாரே மலையாளத்திலும் இயக்குகிறார். மலையாளத்திலும் 'ஆதார்' என்றே வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ராம்நாத் பழனிகுமார் கூறும்போது "2022ம் ஆண்டு 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் வெளியான சமயத்தில் வெளியாகி இருந்தாலும், ஊடகவியலாளர்கள், விமர்சகர்கள், திரைப்படத் துறையினர் மற்றும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த 'ஆதார்' பாராட்டுகளை குவித்தது. தற்போது இப்படத்தை யோகி பாபு முதன்மை வேடத்தில் நடிக்க மலையாளத்தில் இயக்குவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். தரமான படைப்புகளை கொண்டாடும் மலையாள ரசிகர்கள் 'ஆதார்' படத்தையும் வரவேற்பார்கள் என்று நம்புகிறேன்," என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பிளாஷ்பேக் : சிறுத்தையிடமிருந்து உயிர் தப்பிய எஸ்.எஸ்.ஆர்பிளாஷ்பேக் : சிறுத்தையிடமிருந்து ... மும்பை வீடுகளை விற்றார் பிரபுதேவா : சென்னையில் நிரந்தரமாக குடியேற முடிவு மும்பை வீடுகளை விற்றார் பிரபுதேவா : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap