தள்ளிப்போனது டாக்சிக்: அந்த இடைவெளியில் வேறு படங்கள் வருமா? | இது, இரண்டாவது இன்னிங்ஸா? சென்னையில் பாவனா பேட்டி | திருமண வரவேற்பு : வேட்டி சட்டையில் விஜய், புடவையில் ராஷ்மிகா | பான் இந்தியா படங்களை தள்ளி வைப்பது சரியா? | 'மா இன்டி பங்காரம்' படப்பிடிப்பு தளத்தில் ஹோலி பண்டிகையை கொண்டாடிய சமந்தா | தேவிஸ்ரீ பிரசாத்துக்கு பதிலாக தமன் ; பவன் கல்யாண் படத்தின் இசையில் மாற்றம் | கேரள அரசு சினிமா ஸ்டுடியோ திறப்பு விழாவை புறக்கணித்த மலையாள திரைப்பட சங்கங்கள் | அபுதாபியில் இருந்து பத்திரமாக ஊர் திரும்பிய சுவாசிகா | வரலட்சுமியின் 'சரஸ்வதி' படத்தின் டைட்டிலில் சிறிய மாற்றம் | ஹைதராபாத் 'ஷிப்ட்' ஆன லோகேஷ் கனகராஜ் 'டீம்' |

சமீபத்தில் தமிழில் அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவ்னித் இயக்கத்தில் வெளியான படம் 'டூரிஸ்ட் பேமிலி'. சிறிய பட்ஜெட்டில் உருவான இப்படம் உலகளவில் ரூ. 90 கோடிக்கு மேல் வசூலித்தது. சில மாதங்களாக அபிஷன் ஜீவ்னித் கதாநாயகனாக புதிய படத்தில் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியானது. இவர் டூரிஸ்ட் பேமிலி படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அபிஷன் ஜீவ்னித் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை அவரின் உதவி இயக்குநர் மதன் என்பவர் இயக்குகிறார் . இதில் கதாநாயகியாக மலையாள சினிமாவின் இளம் நடிகையான அனஸ்வரா ராஜன் நடிக்கின்றார். இதை ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா அவரின் ஜியான் பிலிம்ஸ் மற்றும் டூரிஸ்ட் பேமிலி படத்தின் இணை தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் பசிலன் அவரின் எம்.ஆர். பி எண்டெர்டெயிமென்ட் நிறுவனங்களின் மூலம் இணைந்து தயாரிக்கின்றனர். ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். விரைவில் படப்பிடிப்பு துவங்குகிறது.




