இன்ஸ்டா பாலோயர்கள் வைத்து தான் சம்பளமா... : ஷா ரா புலம்பல் | சூர்யாவை இயக்கும் அஸ்வத் மாரிமுத்து? | படப்பிடிப்புக்கு முன்பே ஒரு மில்லியன் ரீல்களை எட்டிய 'ஏஏ23' தீம் | பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நித்யா மேனன்! | நண்பர்களுடன் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்த சிவகார்த்திகேயன்! | சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் மஹத் ராகவேந்திரா | துருவ் விக்ரம் அடுத்த படத்தை குறித்து புதிய தகவல் இதோ | காதல், கனவுகள், மனித தொடர்புகளை 'தோ தீவானே சேஹர் மெய்ன்' பேசும் : மிருணாள் தாக்கூர் | தயாரிப்பாளர்களை குழியில் தள்ளும் இயக்குனர்கள் : சேரன் பரபரப்பு பேச்சு | விஜய் பட நடிகைக்கு நேரில் ஆஜராக நீதிமன்றம் பிடி வாரண்ட் |

ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில், கீரவாணி இசையமைப்பில், பவன் கல்யாண், நிதி அகர்வால் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் 'ஹரிஹர வீரமல்லு'. இப்படம் கடந்த ஐந்து நாட்களில் உலகம் முழுவதும் 100 கோடி வசூலைக் கடந்துள்ளது. படத்தின் வெளியீட்டிற்கு முன்பாக பெரும் வரவேற்பும் எதிர்பார்ப்பும் இருந்தது. ஆனால், படம் வந்த பிறகு அது குறைந்தது. ஓரிரு நாட்கள் தவிர படத்திற்கு கூட்டம் சேரவில்லை.
நேற்று திங்கட்கிழமை மிகக் குறைவான கூட்டமே படத்திற்கு வந்துள்ளது. இப்படத்தின் தியேட்டர் வியாபாரம் சுமார் 120 கோடி வரை நடந்துள்ளதாகத் தகவல். 160 கோடிக்கும் அதிகமாக வசூலித்தால்தான் படத்தின் 'பிரேக் ஈவன்' நடக்கும். அதற்கு இன்னும் 60 கோடி வரை வசூலித்தாக வேண்டும். ஆனால், இப்போதுள்ள நிலையில் அந்த வசூலைப் பெறுவது கடினம் என்கிறார்கள். தியேட்டர் வசூலைப் பொறுத்தவரையில் படம் நஷ்டத்தைத் தரவே வாய்ப்புள்ளது என்பது லேட்டஸ்ட் தகவல்.
தெலுங்கில் குறிப்பாக ஆந்திரா மாநிலத்தில் மட்டுமே இப்படத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. மற்ற மொழிகளில் படத்தை சரியான விதத்தில் புரமோஷன் செய்யாததே அங்கெல்லாம் வசூலைப் பெற முடியாததற்குக் காரணம் என டோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள். பான் இந்தியாவாக வெளியிடும் படத்தை அதற்குரிய விதத்தில் கொண்டு போய் சேர்க்கத் தவறிவிடுகிறார்கள் என்பதும் உண்மை.




