நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டில் இதுவரையில் வெளிவந்த 150 படங்களில் ஒரு சில படங்கள் மட்டுமே தியேட்டர்களில் 25 நாட்களைக் கடந்துள்ளன. பெரும்பாலான படங்கள் வெளியான வெள்ளிக்கிழமை, அதற்கடுத்த சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் மட்டுமே தாக்குப் பிடித்து ஓடுகின்றன. அதிகபட்சமாக 10 படங்கள்தான் 25 நாட்களைக் கடந்து ஓடியிருக்கிறது.
இந்த மாதம் ஜுலை 4ம் தேதி வெளியான '3 பிஹெச்கே, பறந்து போ' ஆகிய படங்கள் நேற்றோடு 25 நாட்களைத் தொட்டுள்ளன. இரண்டு படங்களுமே விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றிருந்தாலும் 10 முதல் 15 கோடி வரையில் வசூலித்திருக்கும் என்கிறார்கள். ஓடிடி விற்பனை, இதர விற்பனை மூலம் தயாரிப்பாளருக்கு லாபம் கிடைத்திருக்கலாம் என்பது கோலிவுட் தகவல்.
இந்த ஆண்டு வெளியான படங்களில் 'மத கஜ ராஜா, விடாமுயற்சி, குட் பேட் அக்லி, ட்ராகன், குடும்பஸ்தன், மாமன், ரெட்ரோ, டூரிஸ்ட் பேமிலி, மார்கன்,' ஆகிய படங்கள் 25 நாட்கள் ஓடியுள்ளன. தற்போது அந்த வரிசையில் '3 பிஹெச்கே, பறந்து போக' ஆகிய படங்கள் இணைந்துள்ளன.