'காந்தாரா சாப்டர் 1' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | இல்லாத இடத்தை குறிப்பிட்டு விளம்பரம் நடித்து சிக்கலில் சிக்கிய நடிகர் மகேஷ்பாபுவுக்கு நோட்டீஸ் | கில்லர் படத்திற்காக 4வது முறையாக இணைந்த எஸ்.ஜே.சூர்யா, ஏ.ஆர்.ரஹ்மான் | லிஜோவின் அப்பாவித்தனம் அவரை நாயகியாக்கியது: 'பிரீடம்' இயக்குனர் சத்யசிவா | பிளாஷ்பேக் : ஒரே படத்துடன் தமிழில் மூட்டை கட்டிய காஜல் | பிளாஷ்பேக்: அப்பாவின் நண்பருக்காக மேடையில் ஆடிய சிறுவன் கமல் | ‛3BHK' படத்தின் மூன்று நாள் வசூல் வெளியானது | அஜித் தோவல் வேடத்தில் மாதவன் | திருமணம் குறித்து ஸ்ருதிஹாசன் சொன்ன பதில் | விஷ்ணு விஷால் மகளுக்கு ‛மிரா' என பெயர் சூட்டிய அமீர்கான் |
சூரி நடித்த மாமன் படத்துக்கு முதலில் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனாலும், நல்ல படம் எடுத்து இருக்கிறோம். நீங்க தியேட்டருக்கு வந்து பாருங்க என்று சூரியும், படக்குழுவினரும் ஊர், ஊராக போய் பேசினார்கள். படத்தை நன்றாக பிரமோட் செய்தார்கள். பின்னர், படத்துக்கு வரவேற்பு கிடைத்தது.
ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் சித்தார்த், சரத்குமார், தேவயானி நடித்த '3BHK' படத்துக்கும் எதிர்பார்த்த ஓபனிங் இல்லை. அதனால், படக்குழுவினர் பல்வேறு ஊர்களுக்கு சென்று படம் குறித்து பேசி வருகிறார்கள். இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு சரத்குமார், தேவயானி சென்றது இல்லை. ஆனாலும், தங்கள் படம் ஓட வேண்டும் என்பதால் அவர்களும் தேதி கொடுத்து படக்குழுவினருடன் மதுரை உள்ளிட்ட ஊர்களுக்கு சென்று இருக்கிறார்கள்.
சென்னையில் இன்று நன்றி அறிவிப்பு விழாவும் நடக்கிறது. முதல் ஒரு வாரம் படத்தை தாக்குபிடித்து ஓட வைத்துவிட்டால், அடுத்த சில வாரங்களில் நல்ல வசூல் வரும் என்று படக்குழு நம்புவதால் இந்த ஏற்பாடு. அடுத்து ராம் இயக்கிய பறந்து போ படக்குழுவும் நன்றி அறிவிப்பு விழா நடத்த தயாராகி இருக்கிறது.