நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

டூரிஸ்ட் பேமிலி படத்தை இயக்கிய அபிஷன் ஜீவிந்த் அடுத்து ஹீரோவாக நடிக்கப் போகிறார். டூரிஸ்ட் பேமிலி படத்தில் ஒரு சோகமான கேரக்டரில் நடித்தவர், அந்த படத்தில் பக்கா கமர்ஷியல் ஹீரோவாக மாறப்போகிறார். அந்த படத்தை அவரிடம் இணை இயக்குனரே இயக்கப்போகிறார் என்று கடந்த வாரம் தகவல் கசிந்தன. ஆனால், இந்த தகவலை அபிஷன் ஜீவிந்த் மறுக்கிறார்.
இப்படி கசியும் செய்தி வதந்தி என்கிறார். அடுத்து அவர் ஒரு படத்தை இயக்க தயாராகி வருகிறார். ஒரு முன்னணி ஹீரோ கதை கேட்க தயாராக இருப்பதால், அந்த கதையை மெருகேற்றும் பணியில் இருக்கிறார். அந்த ஹீரோ தனுஷாக இருக்கலாம் என அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள்.
டூரிஸ்ட் பேமிலி படம் 91 கோடிக்கு மேல் வசூலித்தாலும், இயக்குனராக, அதுவும் அறிமுக இயக்குனராக அபிஷனுக்கு சில லட்சம் மட்டுமே சம்பளமாக கிடைத்தது. சசிகுமாருக்கும் சில கோடி சம்பளம் மட்டுமே. படத்தின் லாபம் தயாரிப்பாளர், வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்களுக்கே சென்றது என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.