பராசக்தி முதல் பாடலான 'அடி அலையே' வெளியீடு | தயாரிப்பாளர்களுக்கு கூட பாடல் உரிமையை வழங்கியது இல்லை: இளையராஜா | 'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு : நவ., 8ல் முதல் பாடல் | சத்ய சாய் பாபாவின் மகிமையை சொல்லும் ‛அனந்தா' : நவ., 23ல் வெளியீடு | கிஸ் முதல் நெட்வொர்க் வரை... இந்த வாரா ஓடிடி ரிலீஸ்...! | ''பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம்... டைம் மிஷின் மூலம் அந்த காலம் செல்வது மாதிரி'': துல்கர் சல்மான் | ரோஜா 'கம்பேக்': 'லெனின் பாண்டியன்' படத்தில் நடிக்கிறார் | மணிரத்னம் படம் : சிம்புவிற்கு பதில் விஜய் சேதுபதி | ரஜினிகாந்த்தை 'தலைவர்' எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன் | ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கும் இரண்டு படங்கள் |

முன்னாள் பிரதமர் ராஜிவ் படுகொலை செய்யப்பட்ட காலத்தில், சந்தேகத்தின் பேரில் ஏகப்பட்ட இலங்கை தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களி்ல் ஒரு பிரிவினர் வேலுாரில் அடைக்கப்பட்டனர். அப்படி அடைக்கப்பட்டவர்கள் சுரங்கம் தோண்டி தப்பித்தனர். அந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து ப்ரீடம் என்ற படம் தயாராகிறது. கழுகு உள்ளிட்ட படங்களை இயக்கிய சத்ய சிவா இயக்கியுள்ளார்.
சசிகுமார் ஹீரோ, லிஜோ மோல் ஜோஸ் ஹீரோயின். சிறையில் இருந்து தப்பிப்பவராக சசிகுமாரும், அவர் மனைவியாக லிஜோவும் நடித்துள்ளனர். உண்மை சம்பவம் என்பதாலும், சில சிக்கலான விஷயத்தை பேசுவதாலும் இந்த படத்தை சென்சாரில் சிக்கல் வராதபடி படு கவனமாக எடுத்து இருக்கிறார்களாம்.
இந்த படத்தில்தான் முதலில் இலங்கை தமிழ் பேசி நடித்து இருக்கிறார் சசிகுமார். சில பிரச்னைகளால் இந்த படம் தாமதம் ஆகி, அடுத்து அவர் இலங்கை தமிழ் பேசி நடித்த ‛டூரிஸ்ட் பேமிலி' வெளியாகிவிட்டது. தொடர்ச்சியாக இலங்கை தமிழ் பேசுவது ஏன் என்று சிலர் கேட்கிறார்கள். அதுவும் தமிழ் தானே என்று சசிகுமார் கூறியுள்ளார். இதற்காக இலங்கையை சேர்ந்த ஒரு தமிழ் ஆசிரியரிடம் எப்படி பேச வேண்டும் டியூசன் படித்து இருக்கிறார் சசிகுமார்.
மேலும் கல்லூரிகளுக்கு சென்று படத்தை புரொமோஷன் செய்வதில் தனிப்பட்ட முறையில் எனக்கு உடன்பாடு இல்லை. அது படிக்கும் இடம், அதை திசை திருப்ப விரும்பவில்லை. பின்னாளில் ஒருவேளை நான் அதுபோன்று கல்லூரி நிகழ்ச்சிகளில் பங்கேற்று புரொமோஷன் செய்ய நேர்ந்தால் அது எனது தனிப்பட்ட விருப்பமாக இருக்காது. தயாரிப்பாளரின் அழுத்தமாக இருக்கும் என்றார்.