தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

பவன் கல்யாண் நடிப்பில் நாளை (ஜூலை 25) வெளியாக இருக்கும் படம் 'ஹரிஹர வீரமல்லு'. வரலாற்று பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தை தயாரிப்பாளர் ஏ.எம் ரத்னம் தயாரித்துள்ளார். அவரது மகனான ஜோதி கிருஷ்ணா இந்த படத்தை இயக்கி முடித்துள்ளார். அதாவது பிரபல தெலுங்கு இயக்குனர் கிரிஷ் ஜகர்லமுடி தான் இந்த படத்தை இயக்க துவங்கினார். ஆனால் பவன் கல்யாணின் அரசியல் பணிகள் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பே நீண்ட நாட்களாக இடைவெளி விட்டு விட்டு நடைபெற்று வந்தது.
ஒரு கட்டத்தில் சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த படத்தில் இருந்து கிரிஷ் விலகும்படி சூழல் உருவானது. அதைத் தொடர்ந்து ஏஎம் ஜோதி கிருஷ்ணா மீதி படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தின் துவக்க காலம் தொட்டு கதை உருவாக்கத்திலிருந்து பயணித்து இப்படி பாதியில் விலகியது இயக்குனர் கிரிஷுக்கு மட்டும் நடக்கவில்லை. மலையாளத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மம்முட்டி நடிப்பில் வெளியான 'மாமாங்கம்' என்கிற படத்தின் இயக்குனரான சஜீவ் பிள்ளை என்பவரும் இதே போன்ற ஒரு பிரச்னையை சந்தித்தார்.
மாமாங்கம் படத்தின் கதை உருவாக்கத்தில் கிட்டத்தட்ட பத்து வருடம் தனது உழைப்பைக் கொட்டியவர் மம்முட்டியை வைத்து இந்த படத்தை இயக்கவும் ஆரம்பித்தார். ஆனால் சஜீவ் பிள்ளையின் டைரக்ஷனில் திருப்தி அடையாத படத்தின் தயாரிப்பாளர் படப்பிடிப்பு துவங்கிய சில நாட்களிலேயே அவரை நீக்கிவிட்டு இயக்குனர் பத்ம குமாரை வைத்து முழு படத்தையும் எடுத்தார். இந்த கதையை தயாரிப்பாளருக்கு சஜீவ் பிள்ளை விற்று விட்டதால் நீதிமன்றம் சென்றும் கூட அவரால் இதில் ஒன்றும் செய்ய முடியாமல் போனது.