காதல் படங்கள் குறைந்து விட்டது : கார்த்தி வருத்தம் | எனது சாதனைகள் தமிழ் மண்ணுக்கு சொந்தம் : அல்லு அர்ஜூன் நெகிழ்ச்சி | பிளாஷ்பேக்: தெலுங்கில் 3 விருதுகளை வென்றாலும் தமிழில் அடிவாங்கிய கண்ணகி | பிளாஷ்பேக்: வெள்ளி விழா கொண்டாடிய புராண புனைவு கதை | சமந்தாவின் அபத்தமான, பயனற்ற செலவு என்ன தெரியுமா? | எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம்தான் - காதலை உறுதி செய்த ராஷ்மிகா | கேம் சேஞ்சர் படத்திற்காக 15 கோடியில் படமாக்கப்பட்ட பிரம்மாண்ட பாடல் | பணி படம் பார்த்துவிட்டு ஜோஜூ ஜார்ஜை பாராட்டிய கமல் | 'விசில் போடு' சாதனையை முறியடிக்குமா 'கிஸ்ஸிக்'? | தமிழ் சினிமாவின் 1000 கோடி கனவு…அடுத்த ஆண்டாவது நடக்குமா? |
மலையாளத்தில் நடிகர் பிரித்திவிராஜ் லூசிபர் திரைப்படம் மூலம் ஒரு வெற்றிகரமான இயக்குனராகவும் மாறினார். அந்த படத்தை தொடர்ந்து மீண்டும் மோகன்லாலை வைத்து ப்ரோ டாடி என்கிற இன்னொரு வெற்றி படத்தையும் கொடுத்தார். அதன்பிறகு ஏற்கனவே அறிவித்தது போல லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமான எம்புரான் படத்தை தற்போது இயக்கி வருகிறார். பல கட்டமாக நடைபெற்ற இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பாக ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் பரபரப்புக்கு பெயர் போன பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா எம்புரான் செட்டுக்கு விசிட் அடித்து மோகன்லால் மட்டும் பிரித்விராஜை சந்தித்து உரையாடியுள்ளார். 2002ல் ஹிந்தியில் ராம்கோபால் வர்மா இயக்கிய கம்பெனி என்கிற படத்தில் மோகன்லால் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் என்பதும் இப்போது வரை அவர்களுக்குள் ஒரு நட்பு தொடர்பு வருகிறது என்பதும் பல பேர் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை.
அந்த வகையில் நீண்ட நாட்கள் கழித்து மோகன்லாலை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைவதாக கூறியுள்ள ராம்கோபால் வர்மா. இது குறித்து வெளியிட்டுள்ள பதிவில், “கம்பெனி நினைவுகள்.. ஒன் அண்ட் ஒன்லி மோகன்லாலை நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்தேன்” என்று கூறி அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.
ராம்கோபால் வர்மாவுடனான இந்த சந்திப்பு பிரித்விராஜுக்கும் மிகப்பெரிய மகிழ்ச்சியே. இது குறித்து பிரித்விராஜ் வெளியிட்டுள்ள பதிவில், “ஒவ்வொரு இயக்குனரும் மாடர்ன் இந்திய சினிமாவை பார்த்து தான் வளர்ந்து இருக்கிறார்கள். நானும் அப்படித்தான் யாரை ஒரு லெஜெண்ட் என நினைத்தேனோ அப்படிப்பட்ட உங்களை பார்த்து தான்.. கேமராவையே ஒரு கதை சொல்லும் கருவியாக பயன்படுத்தும் வித்தையை உங்களிடம் தான் பார்த்தேன். உங்களுடைய பல படங்கள் சினிமாவில் அழுத்தமான முத்திரை பதித்தவை. நீங்கள் எங்கள் படப்பிடிப்பு தளத்திற்கு வந்ததும் கலை மற்றும் சினிமா குறித்து நீண்ட நேரம் உரையாடியதும் நாங்கள் செய்த பாக்கியம். மீண்டும் அந்த பழைய விண்டேஜ் அண்டர்வேர்ல்ட் ராம் கோபால் வர்மாவின் கம் பேக்கை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்” என்று கூறியுள்ளார்.