இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

மலையாள சினிமாவில் உச்ச நடிகர்களான மம்முட்டி, மோகன்லால் ஆகியோருக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. தற்போது இன்றைய தலைமுறை நடிகர்களுக்கு இணையாக பிஸியாக இருவரும் படங்களில் நடித்து வருகிறார்.
கடந்த 2008ல் வெளியான 'Twenty:20' மலையாள படத்தில் மம்முட்டியும், மோகன்லாலும் இணைந்து நடித்தனர். அதன் பின்னர் கிட்டத்தட்ட 16 வருடங்களுக்குப் பிறகு தற்போது மம்முட்டி,மோகன்லால் இருவரும் இணைந்து நடிக்கவுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மகேஷ் நாராயணன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் மம்முட்டி, மோகன்லால் என இருவரும் இணைந்து நடிக்கவுள்ளனர். இதில் மற்றொரு மலையாள நடிகரான குஞ்சாக்கோ போபன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் இறுதியில் தொடங்கும் என்கிறார்கள்.