22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சமீபத்தில் அமரன் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கடந்த 10 வருடங்களுக்கு முன்பு வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் என்பவரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி இந்த படம் உருவாகி இருந்தது. இதில் முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் தான் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். இந்த நிலையில் கடந்த 10 வருடங்களுக்கு முன்பே அதாவது முகுந்த் வரதராஜன் இறந்த அந்த சமயத்தில் வெளியான ராணுவ படம் தான் 'பிக்கெட் 43'. மலையாளத்தில் வெளியான இந்த படத்தில் பிரித்விராஜ் கதாநாயகனாக நடிக்க, ராணுவ படங்களை இயக்குவதற்கு பெயர் பெற்ற இயக்குனர் மேஜர் ரவி இந்த படத்தை இயக்கியிருந்தார்.
அந்த படத்தில் இரண்டு தமிழக ராணுவ வீரர்களின் வீர மரணம் குறித்து பெருமைப்படுத்தி இருப்பார் இயக்குனர் மேஜர் ரவி. அந்த சமயத்தில் எல்லையில் வீரமரணம் அடைந்த மேஜர் சரவணன் பொறுப்பு வகித்த 'பிக்கெட் 43' பகுதிக்கு அவருக்கு பதிலாக ஹரீந்திரன் நாயர் என்கிற கதாபாத்திரத்தில் நடித்த பிரித்திவிராஜ் அனுப்பப்படுவார். அதே போல அங்கு இருக்கும் போது கீழே முகாமில் இருக்கும் தனது இன்னொரு சக அதிகாரியுடன் போனில் பேசும்போது அந்த அதிகாரி சமீபத்தில் தான் முகுந்த் வரதராஜனும் வீரமரணம் அடைந்தார் என்கிற தகவலை பிரித்விராஜிடம் தெரிவிப்பார்.
அதை கேட்டு அதிர்ச்சியாகும் பிரித்திவிராஜ், “முகுந்த் வரதராஜன் எனக்கு நல்ல நண்பன் ஆயிற்றே.. அவருக்கு மூன்று வயதில் கூட ஒரு குழந்தை இருக்கிறதே.. நம் வாழ்க்கை எல்லாம் இப்படித்தானா அண்ணா” என்று பேசி இருப்பார். இப்போது சிலர் பிக்கெட் 43யில் இடம் பெற்ற இந்த வசனங்களையும் அமரன் படத்தையும் இணைத்து சோசியல் மீடியாவில் தங்களது கருத்துக்களை பரப்பி வருகின்றனர்.