'நந்தி விருதுகள்' பெருமையை மீட்க விரும்பும் ஆந்திரா | சத்தங்களுக்கு மத்தியில் புதிய விடியலை நோக்கி பயணம் : கெனிஷாவின் பதிவு வைரல் | நடிகர் ஹம்சவர்தன் 2வது திருமணம் | ஒரு காட்சிக்காக படத்தின் மொத்த உரிமத்தையும் வாங்கிய 'ஜனநாயகன்' படக்குழு | கூகுள் மூலம் தமிழ் கற்று கொண்ட ருக்மணி வசந்த் | கதாநாயகனாக அறிமுகமாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால் |
சித்தா படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக சித்தார்த் நடிப்பில் வரும் நவம்பர் 29ம் தேதி வெளியாக இருக்கும் படம் 'மிஸ் யூ'. 'களத்தில் சந்திப்போம், மாப்ள சிங்கம்' உள்ளிட்ட படங்களை இயக்கிய என்.ராஜசேகர் இந்த படத்தை இயக்கியுள்ளார். சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்துள்ளார் தெலுங்கு நடிகை ஆஷிகா ரங்கநாத். இந்த படம் குறித்து சமீபத்தில் இயக்குனர் ராஜசேகர் கூறும்போது, ''தனக்கு பிடிக்காத ஒரு பெண்ணை கதாநாயகன் காதலிக்கும் கதை. இந்த ஓன்லைனை கேட்டதும் உடனே இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் சித்தார்த். நாயகனுக்கு தன்னை பிடிக்கவில்லை என்று தெரிந்தும் அவன் தன்னை காதலிக்கிறான் என்பதை எப்படி நாயகி ஏற்றுக் கொள்கிறாள்? இருவரும் காதலித்து பின் பிரேக்கப் ஆன பிறகு அதன் பிறகு உண்மையான காதல் என்ன என்பதை உணர்கிறார்கள் இதுதான் கதை'' என்றும் கூறியுள்ளார்.
பிடிக்காத பெண்ணை காதலிப்பது தான் இந்த படத்தின் தனித்துவமான கதை என்றும் தனது நண்பர் ஒருவரின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வு தான் இந்த கதைக்கு தூண்டுதலாக அமைந்தது என்றும் கூறியுள்ளார். இயக்குனர் என்.ராஜசேகர். ஆனால் இவர் சொல்லும் அம்சங்கள் எல்லாமே கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு துல்கர் சல்மான் நடிப்பில் மலையாளத்தில் வெளியான 'பட்டம் போலே' என்கிற படத்திற்கு மிக சரியாக பொருந்துகின்றன. அந்த படத்தில் தான் கதாநாயகியாக முதன் முதலாக அறிமுகமானார் நடிகை மாளவிகா மோகனன்.
அந்த படத்தில் துல்கரும் மாளவிகாவும் ஏதோ ஒரு ஈர்ப்பின் காரணமாக காதலித்து, அதனால் வீட்டை விட்டு ஓடிச்சென்று பின் ஓரிரு நாட்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடித்துக் கொள்ளாத குறையாக அவரவர் வீட்டிற்கு திரும்பி விடுவார்கள். அதன் பிறகு எங்கு பார்த்தாலும் கீரியும் பாம்புமாகத்தான் சீறி கொள்வார்கள். ஆனால் போகப்போக இவர்களுக்குள் மீண்டும் காதல் துளிர் விடும். அந்த காதலை மீண்டும் அடைவதற்கு இருவரும் நடத்தும் போராட்டம் தான் படத்தின் கதை. மிஸ் யூ வந்த பின்னர் பார்த்தால் தான் இது எந்த அளவுக்கு உண்மை என்பது இன்னும் கிளியராக தெரிந்துவிடும்.