'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரியன் கான் நடிகராக சினிமாவில் அறிமுகமாவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது தனது மகன் ஆரியன்கான் இயக்குனராக அறிமுகம் ஆகப் போவதாக தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு போட்டு உள்ளார் ஷாருக்கான். அந்த பதிவில், புதுமையாக கதை சொல்லும் முறை, துணிச்சலான காட்சிகள், காமெடி மற்றும் உணர்வுபூர்வமான கதை அம்சத்தோடு மக்களை மகிழ்ச்சிப்படுத்த ஆரியன் கான் வருகிறார் என்று தெரிவித்திருக்கிறார். மேலும் ஷாருக்கான் மகன் ஆரியன் கான் நேரடியாக சினிமாவில் அறிமுகம் ஆகாமல் ஒரு வெப் தொடர் மூலம் இயக்குனர் ஆகிறார். அடுத்த ஆண்டு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் இந்த தொடரை ரெட் சில்லீஸ் நிறுவனம் சார்பாக ஷாருக்கானின் மனைவி கௌரி கான் தயாரிக்கிறார்.