அனில் ரவிபுடி படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ் | பிளாஷ்பேக் : காணாமல் போன நல்லவள் | பிளாஷ்பேக் : கேரக்டருக்காக செத்துப்போன கருப்பு சுப்பையா | டைம் கொடுங்க.... விஜய் ஆட்சி நடத்த அனுமதிக்க வேண்டும் : சேரன் | ஸ்டாலினை சந்தித்ததில் அரசியல் இல்லை: ரஜினி தரப்பு விளக்கம் | விஜய்க்கு ஆதரவு தெரிவித்ததால் சீரியல் வாய்ப்பு போச்சு : அருண் ராஜன் | தனுஷை அணுகும் ஹிந்தி பட இயக்குனர் | இயக்குனராகும் ராம் பொத்தினேனி | சினிமாவில் திருப்புமுனை தந்தவர்களை சந்திப்பாரா முதல்வர் விஜய்? | விதியை மீறி காட்டின் நடுவே இறங்கினாரா ரகுல் ப்ரீத் சிங் ? வனத்துறை விளக்கம் |

லக்னோ: கங்குவா பட நடிகையான திஷா பதானியின் தந்தையிடம், அரசுத் துறையில் உயர் பதவி வாங்கித் தருவதாகக் கூறி ரூ.25 லட்சம் மோசடி செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
நடிகர் சூர்யா நடிப்பில் உருவான கங்குவா திரைப்படம் கடந்த 14ம் தேதி வெளியானது. இந்தப் படத்தில் பிரபல ஹிந்தி நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடித்துள்ளார். இது இவரின் முதல் தமிழ் படமாகும்.
திஷா பதானியின் தந்தை ஜெகதீஷ் சிங் பதானி ஓய்வு பெற்ற டி.எஸ்.பி., ஆவார். இவரை தொடர்பு கொண்ட ஒரு கும்பல், தங்களுக்கு பிரபல அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், ரூ.25 லட்சம் கொடுத்தால், அரசு அமைக்கும் ஆணையங்களின் தலைவர், துணை தலைவர் உள்ளிட்ட உயர் பதவிகளை பெற்றுத் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
இதனை நம்பி, ஜெகதீஷ் சிங் பதானி ரூ.5 லட்சத்தை ரொக்கமாகவும், ரூ.20 லட்சத்தை 3 வெவ்வேறு வங்கிக் கணக்கிலும் அனுப்பியுள்ளார். 3 மாதங்களாகியும் எந்த தகவலும் வராததால், தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த ஜெகதீஷ், போலீஸில் புகார் அளித்துள்ளார்.
அதன்பேரில், ஷிவேந்த்ரா பிரதாப் சிங், திவாகர் கார்க், ஆச்சார்யா ஜெயபிரகாஷ், ப்ரீத்தி கார்க் மற்றும் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் என 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை தேடி வருகின்றனர்.