என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் | ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | காதலில் கரைபவர் வெகு சிலரே : தனுஷின் ‛தேரே இஷ்க் மே' டீசர் வெளியீடு | கமல் பிறந்தநாள் : ரீ-ரிலீஸாகும் ‛நாயகன்' | படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சூர்யா. அவரது மனைவி நடிகை ஜோதிகாவுடன் இணைந்து '2 டி என்டர்டெயின்மென்ட்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை ஏற்கெனவே நடத்தி வருகிறார். அது மட்டுமல்லாது அவரது உறவினர்கள் சிலரும் தனித் தனியாக தயாரிப்பு நிறுவனங்களை நடத்தி வருகிறார்கள். அவற்றிலும் சூர்யா குடும்பத்தினரின் பங்கு இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. அப்பட நிறுவனங்கள் தயாரிக்கும் படங்களில் மட்டும்தான் சமீப காலங்களில் சூர்யா, கார்த்தி ஆகியோர் நடித்து வருகிறார்கள்.
இந்நிலையில் புதிதாக ஒரு தயாரிப்பு நிறுவனத்தை சூர்யா ஆரம்பிக்க உள்ளதாகத் தெரிகிறது. 'ழகரம் ஸ்டுடியோஸ்' என்ற பெயரில் அந்த நிறுவனம் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். அதன் முதல் தயாரிப்பாக மலையாள இயக்குனர் ஜீத்து மாதவன் இயக்க உள்ள படமும், இரண்டாவது தயாரிப்பாக பா ரஞ்சித் இயக்க உள்ள படமும் தயாராகும் எனத் தெரிகிறது. இரண்டு படங்களிலும் சூர்யா தான் கதாநாயகனாக நடிக்க உள்ளார்.
சூர்யா தற்போது தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தன்னுடைய 46வது படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தை முடித்ததும் மேலே குறிப்பிட்ட படங்கள் அடுத்தடுத்து நடக்கும் எனத் தெரிகிறது. 'வாடிவாசல்' படம் எப்போது ஆரம்பமாகும் என்பது தொடர் கேள்வியாகவே உள்ளது.