சினிமாவில் போக்குவரத்து போலீஸ், நிஜத்தில் போக்குவரத்து அமைச்சர் | ‛ஐ யம் கேம்' படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது | மற்றுமொரு வெற்றி, கடவுளுக்கு நன்றி சொன்ன திரிஷா | ‛திரிஷ்யம் 3' - முதல் காட்சியிலேயே தவித்த ரசிகர்கள் | ஆகஸ்ட் மாதம் துவங்கும் மணிரத்னம், விஜய் சேதுபதி படம் | திகில் முதல் காமெடி வரை.... வரிசைக் கட்டும் ஓடிடி ரிலீஸ்...! | ‛ஏழு கடல் ஏழு மலை' படத்தில் ஏ.ஐ தொழில்நுட்பம் | அர்ஜுன் தாஸின் ‛கான் சிட்டி' ரிலீஸ் தேதி இதோ | ராமாயணா படத்தில் சாய் பல்லவி குரலை வேண்டாம் என்ற இயக்குனர் | ‛ஜனநாயகன்' பட நிறுவன தயாரிப்பில் சூர்யா |

தீபாவளிக்கு வரும் படங்களில் ஒன்று ‛கம்பி கட்ன கதை'. இதில் நட்டி, சிங்கம்புலி நடித்து இருக்கிறார்கள். சென்னையில் நடந்த இந்த பட விழாவில் நட்டி குறித்து உருக்கமாக பேசினார் சிங்கம்புலி. ''நான் இயக்குனராக இருந்தேன். பின்னர், சூழ்நிலை காரணமாக ‛நான் கடவுள்' படத்தில் காமெடி நடிகர் ஆனேன். அந்த படம் வந்தபின் என் வாழ்க்கை மாறும், தினமும் பத்தாயிரம் சம்பளம் வாங்கும் நடிகர் ஆவேன் என்று என் மனைவியிடம் பெருமையாக சொன்னேன். ஆனால், வாய்ப்பு வரலை. 5 ஆயிரம் கேளுங்க என்று என் மனைவி சொன்னார். நான் 2 ஆயிரம் வரைக்கு வந்துவிட்டேன். ஆனாலும், சரிவர வாய்ப்புகள் வரவில்லை.
அப்புறம் ‛மாயாண்டி குடும்பத்தார்' படம் வந்து வெற்றி பெற்றது. அந்த சமயத்தில் ‛மிளகா' படத்தில் நடிக்க எனக்கு அழைப்பு வந்தது. என்னை நேரில் பார்த்து பேசிய நட்டி, டக்கென நாலு லட்சம் சம்பளம் கொடுத்தார், அந்த செயலால் மிரண்டுவிட்டேன். அதேபோல் ஒரு சமயம் வெளியூர் படப்பிடிப்புதளத்தில் என்னை அடிக்க சிலர் வந்தார்கள். நான் அவர்களுடன் போட்டோ எடுக்க வாய்ப்பு தரவில்லை என்ற கோபத்தில் கும்பலாக தாக்க வந்தார்கள். நான் அறையில் பதுங்கிவிட்டேன். எனக்காக தைரியமாக சண்டைபோட்டவர் நட்டிதான். இந்த படத்தில் எங்கள் காம்பினேஷன் நல்லா இருக்கும்; படம் பார்த்துவிட்டு சிரிப்பீர்கள். நல்லவரான நட்டி, பல படங்களில் ஏமாற்றுபவராக நடிக்கிறார். அதுதான் சினிமா'' என்றார்.




