கன்னடத்தில் அதிக வசூல் படங்கள் : இரண்டாம் இடம் பிடித்த 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்தடுத்து வெளியாகும் கவின் படங்களின் அப்டேட் | கன்னட பிக்பாஸ் அரங்கு 'சீல்' வைக்கப்பட்டது - அரசு நடவடிக்கை | பிளாஷ்பேக்: இயக்குநர் துரையின் கலைப்பசிக்கு தீனி போட்ட காவியத் திரைப்படம் | தனிப்பட்ட வாழ்க்கையில் கேமரா வைக்க முடியாது: ராஷ்மிகா மந்தனா | எக்ஸ் தளம் நெகட்டிவிட்டி நிறைந்தது : ரவி தேஜா கருத்து | ராஜமவுலி - மகேஷ்பாபு படத்தின் பெயர் 'வாரணாசி'? | ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது |
பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் ஆகிய சமூக வலைதளங்கள்தான் இந்தியாவில் அதிக பயன்பாட்டில் இருக்கிறது. அவற்றில் எக்ஸ் தளத்தை சினிமா ரசிகர்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். அத்தளத்தில் சினிமா ரசிகர்களுக்கு இடையே அடிக்கடி மோதல் நடைபெறுவது வாடிக்கையாகவே உள்ளது. ஹிந்தி, தெலுங்கு, தமிழ் சினிமா ரசிகர்கள் தான் இப்படியான மோதலை அதிகம் உருவாக்கி வருகிறார்கள்.
இந்தியாவைப் பொறுத்தவரையில் சமூக வலைதளங்களை சுமார் 491 மில்லியன் பேர் பயன்படுத்தி வருவதாக எக்ஸ் தளத்தின் குரூக் ஒரு தகவலைச் சொல்கிறது. அதில் 49 சதவீதம் பேஸ்புக், 32 சதவீதம் இன்ஸ்டாகிராம், 10 சதவீதம் யு டியூப், 2.7 சதவீதம் எக்ஸ் தளம் என பயனாளிகளின் சதவீதம் உள்ளது. அதாவது சுமார் 24 மில்லியன் பயனாளிகள். வெறும் 24 மில்லியன் பயனாளிகள் கொண்ட எக்ஸ் தளத்தில்தான் சினிமா ரசிகர்களுக்கான சண்டை, டிரெண்டிங் அதிகமாக நடக்கிறது. அவற்றையும் சில ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்குகிறது.
தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரவி தேஜா தற்போது அவருடைய 'மாஸ் ஜாதரா' படத்திற்கான புரமோஷன்களில் இருக்கிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில், சமூக வலைதளங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
“நான் சில சமயங்களில் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸை வேடிக்கைக்காக;ப பார்ப்பேன். அவை மிகவும் படைப்புத்திறன் மிக்கவை. மறுபுறம், எக்ஸ் தளம் எதிர்மறையால் நிரம்பியுள்ளது. மக்கள் அங்கு எப்போதும் எதிர்மறை அதிர்வுகளை பரப்புகின்றனர். நான் கருத்துக்களை படிப்பதில்லை, மற்றும் எதிர்மறையிலிருந்து விலகி இருக்கவே விரும்புகிறேன். அது என்னை தொந்தரவு செய்வதில்லை, ஆனாலும் நான் அதிலிருந்து என்னை தள்ளி வைத்திருக்கிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.